அவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள் ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து

சென்னை: தமிழக சட்ட சபை தேர்தலில் அவசியம் அறிந்து மக்கள் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள ஸ்டாலினுக்கு, நாட்டின் பல பகுதியில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மாரி செல்வாஜ் வாழ்த்து

மாரி செல்வாஜ் வாழ்த்து

அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவசியம் அறிந்து மக்கள் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிருப்பதாக கூறியுள்ளார்.

அவசியம் அறிந்து

அவசியம் அறிந்து

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, அவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கும் தமிழக மக்களுக்கு அன்பும் நன்றியும் தமிழகத்தின் நம்பிக்கை முதல்வராக பொறுப்பேற்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் என குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கைகளும் வெற்றியடைட்டும்

நம்பிக்கைகளும் வெற்றியடைட்டும்

இதேபோல் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள விஜய் வசந்த் மற்றும் முதல் முறையாக எம்எல்ஏவாகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில்

திரைத்துறையிலிருந்து மக்கள் மன்றத்துக்கு செல்லும் மரியாதைக்குரிய சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சகோதரர் விஜய் வசந்த் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும்.. நீங்கள் வெற்றி பெற்றதை போல உங்கள் மீதான எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் வெற்றியடைட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய முதல்வருக்கு வாழ்த்து

புதிய முதல்வருக்கு வாழ்த்து

இதேபோல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்முடைய புதிய முதல்வர் ஸ்டாலின் சாருக்கும் உதயநிதி ஸ்டாலின் சகோதருக்கும் மற்றும் பெரிய வெற்றி மொத்த திமுகவுக்கும் வாழ்த்து என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X