கர்ணனின் இசை குண்டலம்.. சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளுக்கு மாஸாக வாழ்த்திய மாரி செல்வராஜ்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாளுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அறிமுக படம்
பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பா. ரஞ்சித்தின் அறிமுக படமான அட்டக்கத்தி படத்தில் அறிமுகமான சந்தோஷ் நாராயணன் தான் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்திற்கும் இசையமைத்திருந்தார்.

கர்ணன் படத்திலும்
பரியேறும் பெருமாள் படத்திற்கு சிறப்பான இசையை கொடுத்திருந்த சந்தோஷ் நாராயணன் உடன் கர்ணன் படத்திலும் தனது பயணத்தையும் நட்பையும் தொடர்ந்து வருகிறார் மாரி செல்வராஜ். தனுஷின் வடசென்னை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன் கர்ணன் படத்திற்கும் சிறப்பான இசையமைத்து வருகிறார்.

இசை குண்டலம்
இந்நிலையில், இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். "எங்கள் கர்ணனின் இசை குண்டலம் சந்தோஷ் நாராயணன் சார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் ரசிகர்கள்
காலை முதலே சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கர்ணன் இயக்குநர் மாரி செல்வராஜ் இப்படியொரு வாழ்த்து தெரிவித்துள்ளதை அறிந்த தனுஷ் ரசிகர்கள், கர்ணன் படத்துக்கு கொல வெயிட்டிங் என்றும், ஹேப்பி பர்த்டே சநா என்றும் வாழ்த்தி வருகின்றனர்.

ஜகமே தந்திரம்
பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் மட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் ஃபேவரைட் இசையமைப்பாளர். பீட்சா படம் தொடங்கி ஜிகர்தண்டா, இறைவி, மேயாத மான், மெர்க்குரி, பெண்குயின் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜகமே தந்திரம் படத்திலும் தனுஷுக்கு சநா தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











