twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொள்ளாச்சி கொடூரம்: உருக்கமான கவிதை எழுதிய பரியேறும் பெருமாள் இயக்குநர்

    By Siva
    |

    Recommended Video

    Pollachi News: பொள்ளாச்சி சம்பவம்: கொந்தளித்த சினிமா பிரபலங்கள்- வீடியோ

    சென்னை: பெண் பிள்ளைகளை நினைத்து பெற்றோர் கவலையில் உள்ள நிலையில் பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. இதையடுத்து பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களின் பாதுகாப்பை நினைத்து கவலையிலும், பயத்திலும் உள்ளனர்.

    Mari Selvaraj writes a lovely poem about his daughter

    எந்நேரமும் பெண் பிள்ளைகளை பக்கத்திலேயே வைத்திருக்க முடியாது அல்லவா, அவர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது நடந்துவிடுமோ என்று பெற்றோர் அஞ்சுகிறார்கள்.

    இந்நிலையில் பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    ரம்யா கிருஷ்ணனுக்கு 37 தான், ஆனால் பாவம் விஜய் சேதுபதிக்கு 90 ரம்யா கிருஷ்ணனுக்கு 37 தான், ஆனால் பாவம் விஜய் சேதுபதிக்கு 90

    ஒரு பெண் பிள்ளையின் தகப்பனாக
    எனக்கு எந்த பயமும் இல்லை பதட்டமுமில்லை
    என் மகளுக்கு நான் கடலை காட்டுவேன்
    கடலின் அழகை காட்டுவேன்
    அழகின் ஆழம் காட்டுவேன்
    ஆழத்தில் உயிர்களை காட்டுவேன்
    உயிர்களின் விநோதம் காட்டுவேன்
    விநோதங்களின் விபரீதங்களை காட்டுவேன்
    விபரீதங்களின் காரணம் காட்டுவேன்
    காரணங்களின் முடிவுகளை காட்டுவேன்
    முடிவுகளின் இழப்புகளை காட்டுவேன்
    இழப்புகளிலிருந்து மீள வலு நீச்சல் காட்டுவேன்
    நீச்சலின் நியாயம் காட்டுவேன்
    நியாயத்தின் நிம்மதி காட்டுவேன்
    இத்தனைக்கும் பிறகு அவள் பயந்தால்
    மறுபடியும் கடல் காட்டுவேன்
    அதன் அழகை காட்டுவேன்
    அது அவளுடைய கடல்
    அது அவளுடைய அலை
    அவள் நம்புகிறவரை அவளுக்கு கடல் காட்டுவேன்
    ஆழம் போவதும்
    கரை நடப்பதும்
    அவள் உரிமை
    --
    மாரிசெல்வராஜ்

    English summary
    Pariyerum Perumal director Mari Selvaraj has written a touching poem at a time parents are worried about their daughter's safety.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X