Shariq birthday: ஷாரிக் பிறந்தநாள்.. திரும்ப கொடுக்கும் தருணம்.. மரியா வெளியிட்ட வீடியோ!
சென்னை: நடிகர், பிக்பாஸ் பிரபலம் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வந்த ஷாரிக் ஷாசன், மரியா ஜெனிஃபர் என்பவை ஒரு ஆண்டாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இவர்களது திருமணம் ஷாரிக்கின் அப்பா ரியாஸ் கான், அம்மா உமா ரியாஸ் ஆகியோர் முன்னிலையில் சொந்த பந்தங்கள், நட்புகள், திரையுலக பிரபலங்கள் சூழ மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
இதையடுத்து இந்த தம்பதி மிகவும் பிரபலமானதாக மாறியது. இந்நிலையில் இவர்களது ஹனிமூன் ட்ரிப்பும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. ஹனிமூனுக்கு தன்னுடைய மகளையும் உடனழைத்து சென்றிருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய முப்பதாவது பிறந்தநாளை ஷாரிக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி மரியா instagram-ல் வீடியோ மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

ஷாரிக் & மரியா ஜோடி: நடிகர், பிக்பாஸ் பிரபலம் என எதுவுமே ஷாரிக் ஹாசனுக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. மாறாக அவரது திருமணம் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷாரிக். தன்னைவிட மூன்று வயது மூத்தவரும் திருமணமாகி ஒன்பது வயது மகளுடன் வாழ்ந்து வந்த மரியாவை ஒரு ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷாரிக். இவரது திருமணம் அவரது பெற்றோர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் ஆகியோரின் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டது.

பிரபலமான ஜோடி: தொடர்ந்து இவர்கள் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து மிகவும் பிரபலமான தம்பதிகளாக மாறினர். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த நிலையில் இந்த திருமண வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றன. இந்நிலையில் அடுத்தடுத்து ஹனிமூன் ட்ரிப்புக்கும் இந்த ஜோடி சென்றதை பார்க்க முடிந்தது. சென்ற இடத்திற்கு எல்லாம் தனியாக செல்லாமல் மரியாவின் 9 வயது குழந்தையையும் ஷாரிக் உடனழைத்து சென்றிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் ஷாரிக் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஷாரிக் பிறந்தநாள்.. மரியா வாழ்த்து: அவருக்கு மரியா வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இன்றைய தினம் 30வது பிறந்தநாளை ஷாரிக் கொண்டாடி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். உலகின் பெஸ்ட், அன்பான, ஈகோ இல்லாத மனிதர் என்று பாராட்டியுள்ளார். இருவரும் இணைந்து பல ஆண்டுகள் நடனமாடலாம், இணைந்து சிரிக்கலாம், சிறந்த நண்பர்களாக இருக்கலாம் என்றும் தன்னுடைய எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அன்புள்ள கணவரே, நான் உங்களை அதிகமாக காதலிக்கிறேன் என்றும் உருக்கம் தெரிவித்துள்ளார்.

திரும்ப கொடுக்கும் தருணம்: மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அடுததடுத்து மரியாவின் காதலுக்காக ஷாரிக் கொடுத்த பூங்கொத்துக்களையும் பட்டியலிட்டுள்ளார். அடுத்தடுத்த பெற்ற நிலையில், அவரது பிறந்தநாளில் திரும்ப கொடுக்கும் தருணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஷூ துடைப்பது டான்ஸ் ஆடுவது, மரத்தில் பழம் பறித்து தருவது உள்ளிட்ட, பல விஷயங்களையும் அவர் கூறுவது போல ஈகோ இல்லாமல் சிரித்த முகத்துடன் செய்கிறார் ஷாரிக் ஹாசன். இதையடுதது அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











