சிவகார்த்திகேயன் படத்தின் அழகான இணைப்பு... எஸ்கே20 படத்தின் அடுத்த அப்டேட்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்ததாக டான் படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படமான எஸ்கே 20 படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இது மிகவும் அழகான இணைப்பாக காணப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான படம் டாக்டர். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் காமெடி கலாட்டாக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

டாக்டர் படம்
சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்திருந்த இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. வசூல்மழையை பெற்றுத் தந்தது. தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ள படம் டான் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திலும் அவருக்கு பிரியங்கா மோகனே ஜோடியாகியுள்ளார்.

டான் படம்
படத்தில் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து அயலான், சிங்கப்பாதை உள்ளிட்ட படங்களிலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கிலும் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

எஸ்கே 20 படம்
எஸ்கே 20 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதைப்படி இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்ணை காதலித்து சிவகார்த்திகேயன் மணம் முடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் உக்ரைனை சேர்ந்த மரியா ரபோஷ்பகா என்ற நடிகை சிவாவிற்கு ஜோடி சேர்ந்துள்ளார்.

படத்தில் இணைந்த உக்ரைன் நடிகை
இந்நிலையில் இதுகுறித்து படக்குழு தற்போது உறுதி செய்துள்ளது. அவர் தற்போது படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை அனுதீப் இயக்கி வருகிறார். படத்தில் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஆங்கிலம் கற்கும் சிவா
கதைப்படி தமிழ் ஆசிரியராக இருக்கும் சிவகார்த்திகேயன் நாயகிக்கு தமிழ் கற்றுத் தருவதாகவும் அதேபோல அவரிடமிருந்து ஆங்கிலத்தை கற்பதாகவும் கூறப்படுகிறது. நகைச்சுவை கலந்த காதல் கதையாக இந்தப் படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











