Shariq & Maria: ஷாரிக் ரொம்ப ரொமாண்டிக்.. எங்களோட முதல் முத்தம்.. மரியா சொன்ன சீக்ரெட்!
சென்னை: நட்சத்திர தம்பதியான ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ்கானின் மூத்தமகன் ஷாரிக் ஹாசன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மரியா ஜெனிஃபர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் காதல் திருமணம். மரியாவிற்கு 9 வயதில் ஜாரா என்ற மகள் உள்ள நிலையில், ஷாரிக் அவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
தனக்கு அனைத்தும் இருந்தும் தான் எதை மிஸ் செய்தேன் என்பதை ஷாரிக்கின் நட்பு உணர வைத்ததாக தனது சமீபத்திய பேட்டியில் மரியா ஜெனிஃபர் கூறியுள்ளார். தங்களுக்குள் காதல் ஏற்பட ஜாராதான் காரணமாக இருந்ததாகவும் ஷாரிக்கை அப்பா என்று சகஜமாக பேசி அவருடன் ஒட்டிக் கொண்டதாகவும் மரியா மேலும் தெரிவித்துள்ளார்.

ஷாரிக் & மரியா திருமணம்: நட்சத்திர தம்பதியான ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ் இருவரும் தொடர்ந்து சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் அடுத்தடுத்த சீரியல்கள், நிகழ்ச்சிகள் என தங்களை என்கேஜாக வைத்து வருகின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் ஷாரிக்கின் திருமணம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து தன்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார் ஷாரிக். மரியாவிற்கு 9 வயதில் ஜாரா என்ற மகள் உள்ள நிலையில், அவருக்கு அப்பாவாக மாறியுள்ளதாக ஷாரிக் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
யார் ரொமாண்டிக்?: ஜிம்மில்தான் தான் முதல் முறையாக மரியாவை சந்தித்ததாகவும் தான் சிரிப்புடன் தன்னை அறிமுகம் செய்துக் கொண்ட நிலையில், தன்னைக் கண்டுக் கொள்ளாமல் அவர் சென்றதால், கடுப்பானதாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்தான் தன்னுடைய எதிர்காலம் என்று தீர்மானித்து விட்டதாகவும் ஷாரிக் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். தன்னுடைய மனைவி மரியாவுடன் இந்த பேட்டியை அவர் மிகவும் உற்சாகமாக கொடுத்துள்ளார். இருவரில் யார் ரொமாண்டிக் என்ற கேள்விக்கு இருவரும் மற்றவரை கைக்காட்டியதை பார்க்க முடிந்தது.

முதல் முத்தம்: கேரளாவின் குமுளியில் கடந்த தீபாவளிக்கு தாங்கள் இருவரும் ட்ரிப் சென்றதாகவும் அப்போது மழை உள்ளிட்ட இயற்கையான சூழலில் தங்களது முதல் முத்தம் அரங்கேறியதாகவும் ஷாரிக் தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய மரியா, அதுவரை நண்பர்களாக இருந்த தங்களை இந்த முத்தம் காதலர்களாக மாற்றியதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட ஷாரிக், மரியாவுடன் நண்பராக பழகியபோதே, தானும் ஜாராவும் மிகவும் close ஆக இருந்ததாகவும், அவள் தன்னை அப்பா என்று கூப்பிட வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தையுடன் அதிக ஒட்டுதல்: நீண்ட காலங்களாக மரியா தனியாகவே தன்னுடைய வேலைகள் அனைத்தையும் செய்ததால், இனி அனைத்தையும் நான் பார்த்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் ஷாரிக் கூறியுள்ளார். வீட்டின் சுவற்றில் அழகான வால் பேப்பர்களை அவர் ஒட்டியிருந்ததையும் பார்க்க முடிந்தது. இதற்கான பிளான் அனைத்தையும் மரியா செய்வார் என்றும் வேலை தனக்கானது என்றும் ஷாரிக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய மரியா, ஷாரிக்கின் அப்பா மற்றும் அம்மா இருவரும் தங்களைவிட ஜாராவிற்கு மிகவும் close என்று கூறியுள்ளார். அவ்வப்போது பேசும் அவர்கள், குழந்தையை பற்றி அதிகமாக கேட்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஷாரிக் சிறப்பாக சமைப்பார்: ஒரு அம்மாவாக, ஜாராவை ஷாரிக் மற்றும் அவரது குடும்பத்தினர் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற பயம் தனக்கு இருந்ததாகவும் ஆனால் அவர்கள் தன்னைவிட அவளிடம் அதிகமான பாசத்தை காட்டி வருவதாகவும் மரியா உற்சாகம் தெரிவித்துள்ளார். ஷாரிக் கேட்காமலேயே ஜாரா, அவரை அப்பா என்று கூப்பிடத் துவங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். ஷாரிக் மிக சிறப்பாக குக் செய்வார் என்பதால், வீட்டிற்குள்ளேயே தங்களது அடுத்தடுத்த கொண்டாட்டங்களை திட்டமிடுவதாகவும் வெளியில் செல்லவே பிடிப்பதில்லை என்றும் மரியா மேலும் இந்த பேட்டியின்போது பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











