பான் வேர்ல்ட் தான் போல.. சிவகார்த்திகேயனின் பைலிங்குவல் படத்தில் அவருக்கு ஜோடி யார் தெரியுமா?
சென்னை: பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்காக பான் வேர்ல்ட் லெவலுக்கு யோசித்து அரபிக் குத்து எழுதிய சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் வெளிநாட்டு நடிகை ஹீரோயினாக நடிக்கப் போகிறாராம்.
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த ஒலிவியா மோரிஸ் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவாகப் போகும் பைலிங்குவல் படத்துக்கு ஜோடி எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது இன்னொரு சர்வதேச நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இரண்டு ஹீரோயின்கள் என்றும் கூறப்படுகிறது.

பூஜை போட்டாச்சு
தமிழ் சினிமாவில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் தெலுங்கு டப்பிங் மூலம் டோலிவுட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகும் எஸ்கே 20 படத்தின் பூஜை சமீபத்தில் கோலாகலமாக போடப்பட்டது. இந்த படத்தை இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்.

ஜதி ரத்னலு இயக்குநர்
கடந்த 2021ம் அண்டு டோலிவுட்டில் வெளியான ஜதி ரத்னலு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தின் இயக்குநர் அனுதீப் தான் தற்போது சிவகார்த்திகேயனின் 20வது படத்தை இயக்கி வருகிறார். டான் மற்றும் அயலான் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், டோலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க களமிறங்கி உள்ளார்.

ஒலிவியா மோரீஸ் இல்லை
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் அடுத்த மாதம் 25ம் தேதி வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரீஸ் தான் சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் ஜோடி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் வேறு ஒரு வெளிநாட்டு நடிகை நடிக்கப் போகிறார் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

மரியா ரியாபோஸப்கா
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் புரியாத பாஷையை பேசுவது போல இருக்கும் இந்த பெயர் கொண்ட நடிகை தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். உலகளவில் பாராட்டுக்களை அள்ளிய உக்ரேனிய படமான Eter படத்தின் நாயகி தான் இந்த மரியா ரியாபோஸப்கா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஸ்பெஷல் ஆப்ஸ் 1.5 எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டா ஐடியை கண்டுபிடிச்சாச்சு
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா ரியாபோஸப்கா நடிக்கப் போகும் தகவல் இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி இருக்கா என தேடி வருகின்றனர். ஒருவழியாக அவரது இன்ஸ்டாகிராம் ஐடியை கண்டுபிடித்து விட்டதாகவும் ஷேர் செய்துள்ளனர். வெறும் 23 ஃபாலோயர்களுடன் நம்ம ஊர் சீரியல் நடிகையை விட இன்ஸ்டாகிராமில் பரிதாபமான நிலையில், உள்ள அவரை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூடிய சீக்கிரத்தில் தேற்றி விடுவார்கள் என தெரிகிறது.

என்ன கதை
சிவகார்த்திகேயனின் பைலிங்குவல் படத்தின் கதை குறித்த தகவல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளன. பாண்டிச்சேரியில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றி வரும் இளைஞருக்கும் வெளிநாட்டு பெண்ணுக்கும் ஏற்படும் காதலும் அது செட்டாகாமல் நம்ம ஊர் பெண்ணை காதலிக்கும் அதே கோவா பட பாணிக் கதையை செம ஃபன்னாக உருவாக்கப் போவதாக கூறுகின்றனர்.

பான் வேர்ல்ட்
அரபிக் குத்து பாடலை பான் வேர்ல்ட் லெவலுக்கு வேறமாறி எழுதிய சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்துக்கான ஜோடியையும் உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் என ரசிகர்கள் நிஜமாகவே நீங்களும் பான் வேர்ல்ட் தான் என கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











