நானெல்லாம் கஞ்சா அடிச்சிட்டிருந்தவனாக்கும்... பாக்யராஜ் பகீர் பேச்சு!

சென்னை : நானும் ஒரு காலத்தில் கஞ்சா அடிச்சிட்டு இருந்திருக்கேன் என்று மரிஜுவானா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே. பாக்யராஜ் கூறினார்.

நேற்று சென்னையில் மரிஜுவானா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவுடன் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு மரிஜுவானா படத்தின் இசை வெளியீட்டு விழா படத்தை பற்றிய தனது கருத்துகளையும் மற்றும் பல சுவாரஸ்யமான விசயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

 Marijuana audio released

இயக்குனர் பாக்யராஜ் தற்போது பல இடங்களிலும் விழாக்களிலும் கலந்து கொண்டு தனது கருத்தையும் தனது வாழ்கை பற்றிய பல விசயங்களையும் பகிர்ந்து உள்ளார். நேற்று மரிஜுவானா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் 40 வருடங்களுக்கு முன் கஞ்சா அடித்திருக்கிறேன் என கூறினார்.

மரிஜுவானா என்பது கஞ்சாவின் ஆங்கில பெயராகும் அதை தான் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர் படக்குழு. இந்த இசை வெளியீட்டு விழாவில் கஞ்சா அடித்ததை பகிர்ந்த பாக்யராஜ் , 40 வருடங்களுக்கு முன் செய்த தவறு என்பதால் தான் தைரியமாக தற்போது பகிர்கிறேன் என கூறினார் .

 Marijuana audio released

கஞ்சா சில சமயங்களில் சந்தோஷத்தை தரும் பல சமயங்களில் குழப்பத்தை தரும். அதற்கு சரியான கருத்தை கூறும் வகையிலே மரிஜுவானா படம் உருவாக்கபட்டிருக்கிறது என கூறினார். மரிஜுவானா படத்தின் பாடல்கள் தணிக்கை குழுவிடம் அனுமதி பெற்று தற்போது வந்திருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது என கூறினார் பாக்யராஜ். ஏனெனில் சென்சாரில் சில கடுமையான வரிகள் உள்ள பாடல்கள் இடம் பெற விடமாட்டார்கள் என கூறினார்.

மேலும் தற்போது விஜய் வீட்டில் நடந்த ஐடி ரைட்டு பற்றி பேசிய பாக்யராஜ் தாவணி கனவுகள் படத்தின் போது என் வீட்டிலும் ஐடி ரைட்டு நடந்தது என்று பகிர்ந்தார். தாவணி கனவுகள் வெளியீடு அன்று ஐடி ரைட்டு நடந்ததால் பாக்யராஜ் கட்டாயம் வீட்டை விட்டு வெளியே போகும் சூழ்நிலை ஏற்பட்டதாம் இதனால் அன்று முழுவதும் ஒரு வருமான வரிதுறை அதிகாரி நான் செல்லும் இடங்களிலெல்லாம் என்னுடனே வந்தார், சென்சார் அலுவலகம் முதல் மற்ற அலுவகங்கள் வரை கூடவே வந்தார் என தனது நினைவை கூறினார்.

மேலும் வருமான வரிதுறைக்கு கேள்வி எழுப்பியுள்ள பாக்யராஜ் நாங்கள் வருமான வரி என்ற பெயரில் பல லட்சங்களை வரியாக கட்டுகிறோம் சில நேரங்களில் எங்களின் மார்கெட் கவிழ்ந்து விடும். அப்போது எங்களின் வாழ்வதாரத்திற்கு ஏற்றார்போல ஓய்வூதியம் கொடுக்க ஏதேனும் திட்டம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

பாக்யராஜ் போன்ற பல பிரபலங்களுமே இதே போல கேள்வியை எழுப்பியுள்ளனர். மரிஜுவானா இசை வெளியீட்டில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜனும் வருமானவரிதுறைக்கு பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X