அதிக மருத்துவக்குணம் இருக்கு.. கஞ்சாவை, துளசியுடன் ஒப்பிட்ட நடிகை.. கைது செய்யக் கோரி புகார்!

By

சென்னை: கஞ்சா, துளசியை போல மருத்துவக் குணம் கொண்டது என்று நடிகை ஒருவர் கூறியதை அடுத்து அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.

Recommended Video

பியா பாஜ்பாய் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் சிக்கல்- வீடியோ

தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை ராகிணி திவிவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ராகிணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகிணி திவிவேதி

ராகிணி திவிவேதி

நடிகை ராகிணியை, கடந்த 3 நாட்களாக காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 12 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சிவ பிரகாஷ் முதல் குற்றவாளியாகவும், ராகிணி 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கஞ்சா மருத்துவக்குணம்

கஞ்சா மருத்துவக்குணம்

இந்தப் போதைப் பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கஞ்சா மருத்துவக் குணம் நிறைந்தது என்றும் அதைச் சட்டப் பூர்வமாக்க வேண்டும் என்றும் பிரபல நடிகை கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடக்கத்தில் ஸ்மிதா என்ற பெயரில் சில படங்களில் நடித்து வந்தவர் நிவேதிதா.

சித்திரம் பேசுதடி 2

சித்திரம் பேசுதடி 2

கன்னட நடிகையான இவர், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். கிஷோர் நடித்த போர்க்களம், நடிகர் அபிஷேக் இயக்கிய கதை, ஃபெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2 உள்பட சில படங்களில் நடித்துள்ளார். பிறகு நிவேதிதா என்ற பெயரில் கன்னடத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சட்டப்பூர்வமாக

சட்டப்பூர்வமாக

இதுபற்றி அவர் கூறும்போது, 'தடை செய்யப்படுவதற்கு முன், பல்வேறு சிகிச்சைக்கு இதை பயன்படுத்தி வந்தனர். இதன் தடைக்குப் பின் சதி இருக்கிறது. சுமார் 40 நாடுகளில் இதைப் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இதை சட்டப்பூர்வமாக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

எப்படி ஒப்பிடலாம்

எப்படி ஒப்பிடலாம்

இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. பலர் அவரை சரமாரியாக விளாசியுள்ளனர். கஞ்சாவுடன் துளசியை எப்படி ஒப்பிடலாம் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பலர் கோரியுள்ளனர். இதற்கிடையே, கஞ்சாவை உயர்வாக பேசிய அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X