போதைப் பழக்கத்தின் தீவிரத்தைப் பேசும் மர்ஜுவானா: நல்லா வச்சிருக்காங்கய்யா டைட்டிலு

சென்னை: போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசும் படமாக மர்ஜுவானா இருக்கும் என அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது போதைப் பழக்கம் தான். அதனால் அவற்றை முன்னிலைப்படுத்தும் விதமாக மர்ஜுவானா படத்தை எடுத்து வருகின்றனர்.

Marijuana movie update

சவரிக்காடு இயக்குனர் எம்.என். கிருஷ்ணகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் எம்.டி. ஆனந்த். தற்போது மர்ஜுவானா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் பற்றி பேசிய இயக்குனர் எம்.டி.ஆனந்த், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை இப்படம் பேசும் என்கிறார். நான் 2009 ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது என்னை சுற்றியிருப்பவர்கள் பலர் போதைப் பழக்கத்திற்க்கு அடிமையாவதைக் கண்கூடாகப் பார்த்தேன். அப்போது இதுபற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது.

பிறகு இதுதொடர்பாக ஆராய்ந்து படமெடுக்க வேண்டுமென்று நினைத்தேன். இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவித்துள்ளார்.

Marijuana movie update

இப்படத்தில் கதாநாயகனாக அட்டு திரைப்படத்தில் நடித்த ரிஷி ரித்விக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷா நடிக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஏஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில் பயின்ற கார்த்திக் குரு இசையமைக்கிறார். பால ரோசையா ஒளிப்பதிவு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X