பயில்வான் அண்ணன் பத்தி பேசுனது மனசு வலிக்குது.. பணத்திற்காக இப்படியா..மாரிமுத்துவின் தம்பி ஆவேசம்!

சென்னை: பயில்வான் ரங்கநாதன் அண்ணன் பற்றி பேசியது மனசு வலிக்கிறது என்று மாரிமுத்துவின் தம்பி வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து செப்டம்பர் 9ந் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

Marimuthu brother lashed out at actor Bayilvan Ranganathan who spoke wrongly about Marimuthu death

இதையடுத்து மருத்துவனைக்கு சென்ற மாரிமுத்து, மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருந்த போது உயிரிழந்தார். அவரது திடீர் உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பயில்வான் ரங்கநாதன்: மாரிமுத்து கடைசியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களிடையே வாக்குவாதம் செய்திருந்தார். இணையத்தில் இது மிகப்பெரிய அளவில் வைரலானது, இது பற்றி பேசிய பயில்வான், மாரிமுத்து ஜோசியம் உண்மை இல்லை, சாமியே இல்லை என்று சொன்னதால்தான் இறந்து விட்டார் என்று பேசி இருந்தார்.

Marimuthu brother lashed out at actor Bayilvan Ranganathan who spoke wrongly about Marimuthu death

மனசு வலிக்கிறது: பயில்வான் ரங்கநாதனின் பேச்சால் டென்ஷனான மாரிமுத்துவின் தம்பி, அண்ணன் சாமியை எதிர்த்து பேசியதால்தான், சாமி அவரை கொன்றுவிட்டது என்று பயில்வான் பேசி இருக்கிறார். அப்படி எல்லாம் பேசாதீங்க மனசு வலிக்கிறது. நானும் சாமி இல்லை என்றுதான் சொல்கிறேன் சாமி, என்னைக் கொல்லட்டும் அப்போது பயில்வான் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இறந்தவர் பற்றி பேசுவது ஒரு நல்ல கலைஞனுக்கு அழகு இல்லை.

பணத்திற்காக இப்படியா: நான் இப்போது கூட சாமி இல்லை என்று தான் சொல்கிறேன். அதற்கு ஒரு உதாரணத்தை இப்போது சொல்றேன். ஒரு தெருவில் 5 பெருமாள் கோவில் இருக்கு அதில், ஒரு பெருமாள் கோவிலில் மட்டும் கூட்டம் வருகிறது என்றால், மற்ற நான்கு சாமிக்கு பவர் இல்லை என்றாகி விடுமா. அப்போ கடவுள் இருக்கா? இல்லையா? என்ற கேள்வி தான் என் மனதிற்குள் தோன்றுகிறது. தன்னுடைய வருமானத்திற்காக பயில்வான் ரங்கநாதன் பேசியது மிகப்பெரிய தவறு. அவருக்கு இந்த கூட்டத்தின் மூலம் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மாரிமுத்துவின் தம்பி ஆவேசமாக பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X