அஜித் அப்படி இல்ல ஆனால் விஜய் அந்த விஷயத்தில் அப்படித்தான்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

சென்னை: வசந்த், எஸ்.ஜே.சூர்யா, வைரமுத்து உள்ளிட்டோரிடம் உதவியாளராக இருந்த நடிகர் மாரிமுத்து அஜித் மற்றும் விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயங்கள் ட்ரெண்டாகியுள்ளன.

கோலிவுட்டில் எப்போதும் இரண்டு ஹீரோக்களுக்கிடையே போட்டி நடக்கும். எம்ஜிஆர் - சிவாஜி என்று ஆரம்பித்த அந்தப் போட்டி ரஜினி - கமல் என தொடர்ந்து இப்போது அஜித் - விஜய் என்ற இடத்தில் நிற்கிறது. இவர்களுக்கு அடுத்ததாக சிம்பு - தனுஷ், சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி எனவும் போட்டி நிலவி வருகிறது.

அஜித்துக்கு விஜய்க்கும் போட்டி

அஜித்துக்கு விஜய்க்கும் போட்டி

அஜித்தும், விஜய்யும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ.சி ஆரம்பகாலத்தில் துணை இருந்தார். ஆனால் அஜித்துக்கு அப்படி யாரும் இல்லை. விஜய்க்கு எஸ்.ஏ.சி துணை இருந்தாலும் போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டு பல ஹிட் படங்களை கொடுத்தார். அதேபோல் அஜித்தும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தார்.

அஜித் - விஜய் போட்டியின் உச்சக்கட்டம்

அஜித் - விஜய் போட்டியின் உச்சக்கட்டம்

90களின் தொடக்கத்தில் இருவரும் அறிமுகமானாலும் தங்களுக்கென்று சினிமாவில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு இருவருக்குமே 5லிருந்து 6 வருடங்கள் வரை தேவைப்பட்டது. குறிப்பாக 90களின் இறுதியில் இருவருமே அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுக்க ரஜினி - கமல் என்ற நிலைக்கு அடுத்ததாக அஜித் - விஜய் இடம்பிடித்தனர். இவர்கள் இருவருக்குமிடையேயான போட்டியும், ரசிகர்ளிடையேயான சண்டையும் 2000த்திலிருந்தே தொடங்கிவிட்டன. இவர்களுக்குள் அப்போது ஆரம்பித்த சினிமா சார்ந்த போட்டி இப்போதுவரை தொடர்ந்துவருகிறது.

அஜித் - விஜய் இரண்டு பேரும் எப்படி?

அஜித் - விஜய் இரண்டு பேரும் எப்படி?

இந்நிலையில் இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடமும், பாடலாசிரியர் வைரமுத்துவிடமும் உதவியாளராக இருந்த நடிகர் ஜி.மாரிமுத்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் தனது திரையுலக வாழ்க்கை குறித்தும், திரை நட்சத்திரங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்படி அவர் அஜித், விஜய் இருவர் குறித்து பேசியிருக்கும் விஷயங்கள் தற்போது ட்ரெண்டாகியுள்ளன.

அஜித் அப்படி அல்ல; ஆனால் விஜய் அப்படித்தான்

அஜித் அப்படி அல்ல; ஆனால் விஜய் அப்படித்தான்

அஜித் மற்றும் விஜய் குறித்து பேசிய மாரிமுத்து, " அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் ஆரம்பகாலத்தில் நான் அவர்களுடன் பழகியிருக்கிறேன். அஜித் தனது மனதில் என்ன நினைக்கிறாரோ அதை நேரடியாகவே கொட்டிவிடுவார். அவருக்கு எதையும் உள்ளே வைத்துக்கொள்ள தெரியாது.

ஆனால் விஜய் அப்படி அல்ல. ஒருவர் மீது அவருக்கு கடும் கோபம் இருக்கும். இருந்தாலும அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவருடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பார். அனைத்தையும் உள்ளே வைத்திருப்பார். முழுக்க மைண்ட் ப்ராசஸ் செய்து நான்கு, ஐந்து நாட்களுக்கு பிறகு, விஜய்க்கு யார் மீது கோபம் இருந்ததோ அவருக்கு வேறு வடிவத்தில் தண்டனை வந்து சேரும்" என்றார்.

மோதிக்கொள்ளும் ரசிகர்கள்

மோதிக்கொள்ளும் ரசிகர்கள்

மாஸ்டர் ஆடியோ ரிலீஸில் நம்ம நண்பர் அஜித் என சொன்ன விஜய் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் அஜித் குறித்து எதுவுமே பேசவில்லை. முக்கியமாக யார் நம்பர் 1 என்று தில்ராஜு ஆரம்பித்து வைத்த பிரச்னையை விஜய் நினைத்திருந்தால் வாரிசு ஆடியோ வெளியீட்டு மேடையிலேயே முடித்து வைத்திருக்கலாம். ஆனால் அதனை அவர் செய்யவில்லை.

மாறாக தனக்கு போட்டி தான் மட்டும்தான் அஜித்தெல்லாம் போட்டியே இல்லை என்பது போல் இருந்தது அவரது பேச்சு. இப்படி உள்ளே ஒன்று வைத்து வெளியே மற்றொன்று பேசுவதை விஜய் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடிக்கிறார் என்பது மாரிமுத்துவின் பேட்டி மூலம் உறுதியாகிவிட்டது என அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X