ட்விட்டரில் பெண்ணுக்கு நம்பர்.. காலில் விழுந்த நடிகர் மாரிமுத்து
சென்னை: ட்விட்டரில் பெண்ணுக்கு நம்பர் கொடுத்த விவகாரம் தொடர்பாக மாரிமுத்து பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, வசந்த், மணிரத்னம் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. இதுமட்டுமின்றி கவிஞர் வைரமுத்துவிடமும் உதவியாளராக இருந்ந்திருக்கிறார். மேலும் கண்ணும் கண்ணும், புலிவா உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.

நடிப்பில் மிளிரும் மாரிமுத்து
ஒருகட்டத்தில் இயக்கத்திலிருந்து ஒதுங்கிய மாரிமுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே எதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் தற்போதைய நிலவரப்படி தமிழில் நம்பர் 1 குணச்சித்தர நடிகர் ஆவார். சினிமாவில் மட்டுமின்றி எதிர்நீச்சல் நாடகத்திலும் நடித்துவருகிறார்.

ட்விட்டரில் பெண்ணுக்கு நம்பர்
இந்தச் சூழலில் ட்விட்டரில் பெண் ஒருவருக்கு நடிகர் மாரிமுத்து நம்பர் கொடுத்தது போல் புகைப்படம் ஒன்று ட்ரெண்டானது. இதனையடுத்து அவரது மகன் அகிலன், தனது தந்தை யாருக்கும் நம்பர் தரவில்லை. தந்தையின் ஃபோன் நம்பர் பலரிடம் இருக்கிறது. அவர்களில் யாரோ அதனை தவறாக பயன்படுத்திவிட்டார்கள் என தெரிவித்திருந்தார்.

ஆமாம் நான் தான் நம்பர் கொடுத்தேன்
இந்நிலையில் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆமாம் நான் ஒரு பெண்ணுக்கு நம்பர் கொடுத்தேன். ஒரு இயக்குநராக, நடிகனாக சினிமாவில் இருக்கும் நான் ஒரு பெண்ணிடம் என்னுடைய தொலைபேசி எண்ணை கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதுமட்டுமின்றி என் நம்பரை கொடுப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. . அந்தப் பெண் என்னிடம் என்னுடைய நம்பர் கேட்டார்.அதனால் கொடுத்தேன். எனது பெயருக்கு எதுவும் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக தந்தை நம்பர் கொடுக்கவில்லை என என் மகன் ட்வீட் செய்திருக்கிறார்" என்றார்.

காலில் விழுந்த நடிகர் மாரிமுத்து
அதனையடுத்து பேசிய அவர் என்னை பலர் பழமைவாதி, பிறப்போக்குவாதி என்கின்றனர். ஆனால் நான்தான் இருப்பதிலேயே புதுமைவாதி. எனது மகனுக்கும், மகளுக்கும் வேற்று சாதியில்தான் திருமணம் செய்துவைக்கப்போகிறேன். நான் ஜாதகத்தையோ, நல்ல நேரத்தையோ நம்புவதில்லை. நானா பழமைவாதி' என்றார்.
அப்போது நெறியாளர் மாரிமுத்துவிடம், நீங்கள் ஒரு பேட்டியில் ஆணுக்கு பின்னால்தான் பெண் நடந்து வர வேண்டும் என்றீர்களே என கேட்டார். அதற்கு பதிலளித்த மாரிமுத்து அது அழகுதானே என்றார். பதிலுக்கு நெறியாளர், இது பழமைவாதம் இல்லையா என கேட்டதற்கு; அது அழகுதானே. ஆண் முன்னால் வந்து பின்னால் பெண் வருவது அழகுதானே என சொன்னார். இருந்தாலும் அது பழமைவாதம்தானே என நெறியாளர் கேட்க; எப்போதோ நான் அப்படி கூறியது. சரி அப்படி சொன்னதற்கு மன்னித்துவிடுங்கள் என கூறி நெறியாளரின் காலில் விழுந்தார் மாரிமுத்து. தற்போது இது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











