Marimuthu: சினிமாவில் விட்டதை சீரியலில் பிடித்த ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து... சம்பளம் இவ்வளவா..?

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.

ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடித்துள்ள மாரிமுத்துவுக்கு சீரியல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்தனை வருடங்களாக சினிமாவில் கிடைக்காத பேரையும் புகழையும் ஒரே சீரியலில் பிடித்துவிட்டார் மாரிமுத்து.

அதுமட்டும் இல்லாமல் சம்பள விஷயத்திலும் இப்போது அவர் தான் நம்பர் 1 என சொல்லப்படுகிறது.

 Marimuthu Salary: Actor Marimuthus Salary for Ethirneechal Serial

எதிர்நீச்சல் மாரிமுத்து சம்பளம்: யுத்தம் செய், பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் மாரிமுத்து. தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் வில்லனாக நடித்துள்ள மாரிமுத்து, ரியல் ஆதி குணசேகரனாகவே மிரட்டி வருகிறார்.

இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ள மாரிமுத்துவுக்கு, எதிர்நீச்சல் சீரியல் தான் மிகப்பெரிய சக்சஸ் கொடுத்துள்ளது. வசந்த், எஸ்ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ள மாரிமுத்து, கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் கொண்டுபோய் விட்டது. முக்கியமாக எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் காட்சிகளை எடிட் செய்து ரீல்ஸில் வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

எதிர்நீச்சல் சீரியல் ஹிட் அடிக்க மாரிமுத்துவின் வில்லத்தனம் தான் காரணம் என ரசிகர்களே கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலுக்காக மாரிமுத்து வாங்கும் சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு மட்டுமே 75 முதல் 85 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறாராம் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 Marimuthu Salary: Actor Marimuthus Salary for Ethirneechal Serial

உதவி இயக்குநர், நடிகர் என பல வருடங்களாக சினிமாவில் வலம் வரும் மாரிமுத்துவுக்கு இதுவரை எதுவும் பெரிதாக அமையவில்லை. ஆனால், எதிர்நீச்சல் சீரியல் கொடுத்த கம்பேக் அவரது கேரியரையே மாற்றிவிட்டது. இந்த சீரியலில் நடித்த பின்னர் மேலும் பல வாய்ப்புகள் அவரைத் தேடிச் செல்வதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடை திறப்பு விழா உட்பட பல பொதுநிகழ்ச்சிகளிலும் கெஸ்ட்டாக கலந்துகொள்கிறார் மாரிமுத்து.

இதன் மூலமும் அவர் மாதம் பல லட்சங்கள் சம்பளமாக வாங்குகிறாராம். ஆகமொத்தம் ஒரு மாதத்திற்கு சீரியல் உட்பட அனைத்து வகைகளிலும் சேர்ந்து 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் மாரிமுத்து, இனி சினிமாவிலும் சிறப்பாக சம்பாதிப்பார் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X