தனுஷ் சாதாரண நடிகர் இல்ல.. படப்பிடிப்பில் நேரில் பார்த்த அனுபவத்தை பகிரும் நடிகர் மாரிமுத்து!

சென்னை :தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி வருகிறார் நடிகர் தனுஷ்

கடைசியாக தனுஷுக்கு வெளியான ஜகமே தந்திரம் மற்றும் தற்போது வெளியாகியுள்ள மாறன் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

இந்த நிலையில் பிரபல நடிகர் மாரிமுத்து தனுஷை படப்பிடிப்பில் நடிக்கும் காட்சியை பார்த்துவிட்டு மிரண்டுபோயுள்ளார்.

 வயதான தோற்றத்தில்

வயதான தோற்றத்தில்

எல்லாவிதமான படங்களையும் பண்ணவேண்டும் எல்லாவிதமான ஆடியன்ஸையும் கவரவேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நடிகர் தனுஷ் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட அசுரன் திரை படத்தில் முதல் முறையாக வயதான தோற்றத்தில் தனுஷ் நடித்து பிரமாதப்படுத்தியிருப்பார். தனுஷின் அபார நடிப்புக்கு இந்த படம் தேசிய விருதை வென்றது.

 நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

அசுரன் திரைப்படம் மொழிகளையும் கடந்து பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து பாராட்டுக்களை பெற்றார் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவான அடுத்தடுத்த படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அந்த வகையில் ஜகமே தந்திரம் முதலில் ஓடிடியில் வெளியானது அதை தொடர்ந்து சமீபத்தில் மாறன் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

 ஹாலிவுட்டிலும் அறிமுகம்

ஹாலிவுட்டிலும் அறிமுகம்

ஜகமே தந்திரம் மற்றும் மாறன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை இந்த நிலையில் தமிழைத் தொடர்ந்து தனுஷ் நேரடி தெலுங்கு படமொன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்திற்கு வாத்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்திய அளவில் கலக்கிக் கொண்டிருந்த தனுஷ் பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து தி கிரே மேன் என்ற படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்

 கண்கள் முழுவதும் ரெட்டாக

கண்கள் முழுவதும் ரெட்டாக

இவ்வாறு உலகம் முழுவதும் பிரபலமான நடிகராக உள்ள நடிகர் தனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு போன பிரபல நடிகர் மாரிமுத்து பேசியுள்ளார். பொல்லாதவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது கிஷோருக்கு தனுஷுக்கும் இடையே நடக்கும் காட்சியில் தனுஷ் நடிப்பை பார்த்து அப்படியே சிலிர்த்து விட்டது. அந்தக் காட்சியில் நடிக்கும்போது தனுஷுக்கு கண்கள் முழுவதும் ரெட்டாக மாறிவிட்டது. ஒரே ஷாட்டில் அந்த காட்சியை தனுஷ் முடித்தார்.

தனுஷ் சாதாரண நடிகர் இல்லை

தனுஷ் சாதாரண நடிகர் இல்லை

பார்த்து அப்படியே பிரமித்துப் போனேன். கர்ணன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் தனுஷ் என்னை அட்ராங்கி ரே படத்திற்கு ரெகமன்ட் செய்து நடிக்க ஒரு கதாபாத்திரமும் எனக்கு அதில் கிடைத்தது. இவ்வாறு தனுஷ் நடிப்பு குறித்து மிரண்டு போய் நடிகர் மாரிமுத்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X