twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உண்மையை சொன்னா எதிர்க்கிறாங்க... 'மெரினா புரட்சி' இயக்குனர் வேதனை

    By
    |

    சென்னை: இரண்டு வருடப் போராட்டத்துக்குப் பிறகு மெரினா புரட்சி படம் வெளிவருகிறது என்று இயக்குனர் ராஜ் தெரிவித்தார்.

    ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் ஒன்று கூடிய புரட்சி, உலகெங்கும் பேசப்பட்டது. இந்தச்சம்பவத்தை விறுவிறுப்புக் குறையாத அசல் சினிமாவாக்கி இருக்கிறார், இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு

    அரசியல் அமைப்பு, தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என்று யார் ஆதரவும் இல்லாமல் இப்படியொரு புரட்சி எப்படி சாத்தியம் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது. அந்தக் கேள்வி எனக்கும் இருந்ததால், புலனாய்வில் இறங்கினேன். சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதைக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கினேன்'என்கிறார் எம்.எஸ்.ராஜ்.

    2 தமிழர்கள்

    2 தமிழர்கள்

    ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால், இரண்டு தமிழர்கள் இருந்தார்கள். விலங்குகள் நல அமைப்புக்கு முன்பே, ஒரு நடிகையும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும் காரணமாக இருந்தார்கள். அவர்கள் யார் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறேன்.

    வன்முறை

    வன்முறை

    எதற்காக இதை செய்தார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாள் வன்முறை, யாரால், எதற்காக, எப்படி செய்யப்பட்டது என்பதையும் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

    சான்றிதழ்

    சான்றிதழ்

    இதன் காரணமாக தணிக்கை சான்றிதழ் அனுமதி தர மறுத்துவிட்டார்கள். இரண்டு வருட போராட்டத்துக்குப் பிறகு நீதிமன்றத்தின் மூலம் தணிக்கை சான்றிதழ் வாங்கியிருக்கிறோம். 2 வருட போராட்டத்துக்குப் பிறகு வரும் 13 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது' என்கிறார் ராஜ்.

    வேல்ராஜ்

    வேல்ராஜ்

    மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட நவீன், ஸ்ருதி, 'புட் சட்னி' ராஜ்மோகன் உட்பட பலர் இதில் நடித்திருக்கிறார்கள். சம்பளம் வாங்காமல் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

    பொக்கிஷம்

    பொக்கிஷம்

    மெரினா போராட்டம்தான் மையம் என்றாலும் சினிமாவுக்கான விறுவிறுப்பு இதில் இருக்கும். தமிழர்கள் காலங்காலமாக பாதுக்காக்கப்பட வேண்டிய பொக்கிஷம் என்று கூறியிருக்கிறார் சகாயம் ஐஏஎஸ்.

    பாராட்டு

    பாராட்டு

    படத்தைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தனியரசு எம்.எல்.ஏ உட்பட பலர் பாராட்டியிருக்கிறார்கள் என்கிறார் இயக்குனர் ராஜ்.

    இந்தப் படம், நார்வே திரைப்பட விருது, கொரிய தமிழ் சங்க விருது ஆகியவற்றைப்
    பெற்றிருக்கிறது.

    English summary
    Debutant director MS Raj is all set to present a Tamil film called, Marina Puratchi, based on the pro-jallikattu protests that took place across the state of Tamil Nadu in January 2017. This movie to release on 13th december.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X