ஒரு பக்கம் சிவப்பு.. மறுபக்கம் காளை மாடு.. மாட்டின் கழுத்தில் ‘மெரினா கடற்கரை’!

மெரினா புரட்சி திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

சென்னை: மெரினா புரட்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக மக்கள் மெரினாவில் கடந்த ஆண்டு போராடியது தை புரட்சி என்று தமிழர்களால் பெருமையோடு அழைக்கப்படுகிறது.

Marina Puratchi first look!

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக வீரர்கள் களமிறங்கிய போராட்டம், பின்னர் மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வால் மெரினாவில் ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு வெற்றியை பெற்றபிறகே நிறைவடைந்தது.

இந்த மாபெரும் போராட்டம், மெரினா புரட்சி என்ற பெயரில் படமாக தயாராகிவருகிறது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்குகிறார்.

ஒரு பக்கம் சிவப்பு, மற்றொரு பக்கம் காளை மாடு, மாட்டின் கழுத்தில் மெரினா கடற்கரை என அழகாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் படத்தொகுப்பு செய்கிறார், அல்ருஃபியான் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X