twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “ஜல்லிக்கட்டு தடைக்கு ஒரு நடிகையும் காரணம். அவர்...”: ‘மெரினா புரட்சி’ இயக்குநர் பகீர் தகவல்!

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியை பேசும் படமாக மெரினா புரட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

    |

    Recommended Video

    மெரினா புரட்சி’ இயக்குநர் பகீர் தகவல்!

    சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது மெரினா புரட்சி திரைப்படம்.

    நாட்சியாள் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜ், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் மெரினா புரட்சி. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியை பேசும் வகையில் புலனாய்வு பார்வையில் இப்படம் உருவாகியிருக்கிறுது. இப்படம் வெளியானதும், ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமாக இருந்த சில தமிழர்களின் முகமூடி கிழியும் என இயக்கும் எம். எஸ்.ராஜ் தெரிவித்தார்.

    போராட்டக்களம்:

    போராட்டக்களம்:

    இதுகுறித்து அவர் கூறியதாவது,"மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து தான் இப்படம் உருவாகியுள்ளது. இந்த போராட்டம் என்பது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதமே தொடங்கிவிட்டது. அப்போது இருந்தே அதனை பின்தொடர்ந்து வருகிறேன். போராட்டக்களத்தில் நிறைய காட்சிகளை கேன்டிட்டாக ஷூட் செய்தோம்.

    போராட்டம்:

    போராட்டம்:

    2017 ஜனவரி 8ம் தேதி சென்னை மெரினாவில் 18 பேர் கூடி இந்த போராட்டத்தை தொடங்கினர். அந்த 18 பேர் தான் இந்த போராட்டம் உருவாகக் காரணம். அவர்கள் அனைவரும் இந்த படத்தில் வருகின்றனர்.

    பீட்டாவின் நோக்கம்:

    பீட்டாவின் நோக்கம்:

    நாட்டு மாடுகளை அழிப்பது மட்டுமே பீட்டாவின் நோக்கம் அல்ல. அவர்களின் அசைன்மெண்ட் மிகப்பெரியது. இந்த படம் எடுப்பதற்கு முன்னர் எட்டு மாதங்கள் தீவிரமாக ஆய்வு செய்தேன் அதில் நிறைய உண்மைகள் வெளிவந்தன.

    நடிகையும் ஒருவர்:

    நடிகையும் ஒருவர்:

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடைவர காரணமாக இருந்ததே மூன்று தமிழர்கள் தான். அதில் ஒரு நடிகையும் அடங்குவார். நிச்சயம் திரிஷா இல்லை. நீங்கள் நினைத்தே பார்க்க முடியாத ஒருத்தவர் அவர்.

    பின்னணி:

    பின்னணி:

    இப்படி நிறைய உண்மைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இதனால் என்ன பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டவர்கள், போராட்டத்தின் இறுதி நாட்களில் எப்படி மாறினார்கள், கடைசி நாளில் வன்முறை எப்படி வெடித்தது, போராட்டத்தை ஆட்சியாளர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை எல்லாம் தைரியமாக சொல்லியிருக்கிறோம்", என அவர் தெரிவித்தார்.

    English summary
    The upcoming tamil movie Marina Puratchi will reveal the background of Jallikatu protest held in Chennai last year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X