வெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் அதிகமாக டாக்குமென்ட்ரி படங்கள் வெளி வருவதில்லை. தமிழர்களின் ஒற்றுமைக்கான சமீபத்திய எடுத்துக்காட்டான ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த டாக்குமென்ட்ரி படமாக உருவாகியுள்ள 'மெரினா புரட்சி' டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி, சமுத்திரகனி, சூரி என மூன்று பிரபல நடிகர்கள் ட்விட்டரில் தற்போது மெரினா புரட்சி டிரைலரை ரிலீஸ் செய்துள்ளனர்.

மற்றொரு சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் அரசியல் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்த டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார்.
எம். எஸ். ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த டாக்குமென்ட்ரி படத்தில் மெரினா புரட்சியின் போது நடந்த பல வெளிவராத உண்மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், நார்வே மற்றும் கொரிய நாடுகளில் சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்கான விருதினையும் மெரினா புரட்சி வென்றுள்ளது.
விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மெரினா புரட்சியில் நீங்களும் கலந்து கொண்டிருந்தீர்கள் என்றால், ஒருவேளை உங்களையும் திரையில் காணலாம்.


Click it and Unblock the Notifications











