கன்னத்தில் ஓங்கி அறைந்தார் மாரிசெல்வராஜ்… பரியேறும் பெருமாள் நடிகர் உருக்கம் !

சென்னை : பரியேறும் பெருமாள் படப்பிடிப்பின் போது மாரி செல்வராஜ் தன்னை கன்னத்தில் அறைந்தார் என்று அந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

மாரிசெல்வராஜ் இயக்கடத்தில் 2018ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் பரியேறும் பெருமாள் இத்திரைப்படத்தில், கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன் இப்படத்தை தயாரித்திருந்தது.

தமிழ் நாட்டின் எத்தனையோ இடங்களில் பார்த்தும் கேட்ட கதைதான் என்றாலும், அதைச் சொல்லியிருக்கக்கூடிய விதத்தில், சிறந்த படங்களில் ஒன்றாக பரியேறும் பெருமாள் படத்தை மாற்றியது.

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்

ஜாதிவெறி, அந்த ஜாதிவெறியின் கொடூரம் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நீண்டிருப்பது, ஒடுக்கப்பட்டவர்களின் மீது மிக நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் அனைத்து இடங்களிலும் நடத்தப்படும் வன்முறை, அந்த வன்முறையால் ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்து அழியாத வலியுடன் கூறிய திரைப்படம் தான் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாகவே இருந்தது.

தெருக்கூத்து கலைஞர்

தெருக்கூத்து கலைஞர்

இப்படத்தில் கதாநாயகன் கதிரின் தந்தையாக வந்த தங்கராஜை அறிமுகம் செய்தவிதமும். பெண் சாயலுடன் அவர் நடித்ததும் படத்திற்கு மிகவும் பிளஸ்சாக அமைந்து இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் நடித்த தங்கராஜ் ஒரு தெருக்கூத்து கலைஞராவார். இவரை தேடிச்சென்று இந்த படத்தில் அறிமுகப்படுத்தினார் மாரிசெல்வராஜ்.

தங்கராஜ் பேட்டி

தங்கராஜ் பேட்டி

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள தங்கராஜ், பரியேறும் பெருமாள் படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில் இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்று சொன்னார் மாரிசெல்வராஜ். உடனே, நான் எங்கோ தெருவுல நிம்மதியாக ஆடிக்கிட்டு இருந்தேன் இங்கே கூட்டிவந்து இப்படி பண்றீங்களே என கேட்டேன்.

ஓங்கி அறைந்தார்

ஓங்கி அறைந்தார்

உடனே என் கன்னத்தில் ஓங்கி அறைந்து, நீ செத்து போனபிறகும் இந்தபடத்தை பார்க்கும் அனைவரும் உன்னையும், உன் கலையையும் பார்த்து கொண்டாடுவார்கள், காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன் நீ என்று சொன்னார். அவர் சொன்து போல படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் பலர் என்னை பாராட்டி வருகிறார்கள். இந்த பெருமை மாரி செல்வராஜால் எனக்கு கிடைத்தது என்று தங்கராஜ் உருக்கமுடன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X