பர்ஃபெக்ட் மிடில் கிளாஸ் அப்பா.. அந்த ஒரு வார்த்தையே போதும்.. அதிரவைத்த மரியநேசனின் மரணம்!
சென்னை: மரியநேசனின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தற்போது நடிகையாக உயர்ந்துள்ளார் லாஸ்லியா.

பிக்பாஸில் மரியநேசன்
இந்நிலையில் அவரது தந்தையான மரியநேசன் நேற்றிரவு திடீரென மரணமடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் லாஸ்லியா பங்கேற்றதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார் மரியநேசன்.

பத்தாண்டுகளாக பார்க்காமல்
அப்போது தனது மகளான லாஸ்லியா கவினை காதலித்ததை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக நடந்துகொண்டார். பத்தாண்டுகளாக மனைவி மற்றும் மகள்களை பார்க்காமல் கனடாவில் பணிபுரிந்த மரியநேசன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது மகளை கட்டியணைத்து ஆரத்தழுவுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

காலில் விழுந்து கதறிய லாஸ்
ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அவர், மகளை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. லாஸ்லியா கட்டியணைத்து காலில் விழுந்தபோது கூட அவரது முகத்தை பார்க்காமல், திரும்பியப்படி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

மானம்தான் முக்கியம்
கடந்த பிக்பாஸ் சீசனில் ரொம்பவே எமோஷனலான காட்சி அது என கூறப்பட்டது. ஒரு பர்ஃபெக்ட் மிடில் கிளாஸ் அப்பாவாகவும் ஜென்டில்மேனாகவும் நடந்து கொண்ட மரியநேசன், காசு பணத்தை விட மானம்தான் முக்கியம்.. பிச்சையெடுக்கலாம் என்று கூறினார்.

மரியநேசன் ஆர்மி
அந்த வார்த்தையை கேட்ட பலரும் மரியநேசன், ஒரு நியாயமான அக்கறையான அன்பான அப்பாவாக நடந்துகொண்டார் என பாராட்டினர். அவரால் கவரப்பட்ட ரசிகர்கள் அவருக்காக ஆர்மியை தொடங்கினர்.

மரியநேசனுக்கு ஆதரவு
விஜய் டிவியில் மரியநேசன் பங்கேற்ற அந்த எபிசோட் பெரும் ஹிட்டானது. அதுவரை கவின் - லாஸ்லியா காதலுக்கு ஆதரவு தெரிவித்த பலர், மரியநேசனின் எமோஷனலை பார்த்த நெட்டிசன்கள் உடனடியாக அவரது பக்கம் திரும்பினர்.

ரசிகர்கள் சோகம்
இந்நிலையில் திடீரென மரணமடைந்துவிட்டார் மரியநேசன். அவரது மரணம் லாஸ்லியா மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மரியநேசனின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அப்பாவும் மரணம்
ஏற்கனவே லாஸ்லியா தனது அக்காவை பறிகொடுத்தவர். காதல் தோல்வியால் லாஸ்லியாவின் அக்கா பிரியங்கா தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்நிலையில் தான் மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட அப்பாவை இழந்துள்ளார் லாஸ்லியா.

படம் ரிலீஸாவதற்குள்..
மரியநேசனின் மறைவை தாங்கிக்கொள்ளும் தைரியத்தையும் மனோபலத்தையும் இறைவன் அவரது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ரிலீஸ் ஆவதற்குள் அவரது தந்தை மறைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











