கோலாகலமாக நடந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்!

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தந்தையைப் போலவே சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக இருக்கிறார்.

Mark anthony Director adhik ravichandran and prabhu daughter aishwarya marriage

நடிகர் பிரபுவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார்.

விவாகரத்து: நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அவருடைய சகோதரி தேன்மொழியின் மகன் குணாலுடன் 2009ம் ஆண்டு திருமணம் மிகவும் கோலாகலமாக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் ஐஸ்வர்யா. அவர் Meltz Desertz எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கேக் செய்து விற்பனை செய்யும் தொழிலை ஐஸ்வர்யா வெற்றிகரமாக செய்து வருகிறார்.

இயக்குநருடன் காதல்: அத்தை மகனை திருமணம் செய்த ஐஸ்வர்யா விவாகரத்தாகி பெற்றோருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நேரத்தில் தான் ஐஸ்வர்யாவுக்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, இரு வீட்டாரும் இவர்களது காதலை ஏற்றுக்கொண்டனர்.

இன்று திருமணம்: இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் 63: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா, சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி உள்ளார். அண்மையில் இவர், விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. தற்போது இவருக்கு, அஜித் குமாரை வைத்து ஏ.கே. 63 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தனக்கு மிகவும் பிடித்த அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருக்க்கும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமண பந்தத்திலும் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X