Mark Antony Box Office: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மார்க் ஆண்டனி... முதல் வசூல் இத்தனை கோடியா..?

சென்னை: விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று வெளியானது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகியுள்ள இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள மார்க் ஆண்டனி, விஷாலுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

Mark Antony Box Office: Vishal and SJ Suryah starring Mark Antony day 1 worldwide Box Office Report

மார்க் ஆண்டனி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷால், எஸ்ஜே சூர்யா ஆகியோருடன் செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேற்று ரிலீஸானது. முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் சூப்பரான வரவேற்பு கிடைத்துள்ளது. விஷால் - எஸ்ஜே சூர்யா செய்துள்ள காமெடி அலப்பறை ரசிகர்களை கலங்கடிக்கை வைத்துள்ளது. டைம் ட்ராவல்,ம் ஆக்‌ஷன் ப்ளஷ் காமெடி என கொஞ்சம் வெரைட்டியாக கலந்துக்கட்டி அடித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். விஷாலின் ஆக்டிங் சூப்பர் என்றால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் சூறாவளியாக சுழன்று அடித்துள்ளார்.

எஸ்ஜே சூர்யாவின் நடிப்பில் தியேட்டரே அல்லோலப்பட்டுள்ளது. முக்கியமாக இடைவேளை சீன், சில்க் ஸ்மிதா வரும் காட்சி என கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்சர் விளாசியுள்ளார் எஸ்ஜே சூர்யா. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்துக்கு முதல் நாளில் செம்ம மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது. மார்க் ஆண்டனி ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பில் தியேட்டர் சென்ற ரசிகர்கள், படத்தை என்ஜாய் செய்துள்ளனர்.

இதனால், மார்க் ஆண்டனி படத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. அதன்படி, இந்தப் படம் முதல் நாளில் 7 முதல் 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடைசியாக வெளியான விஷாலின் படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், மார்க் ஆண்டனி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, விஷாலுக்கும் கம்பேக் கொடுத்துள்ளது.

40 கோடி பட்ஜெட்டில் உருவான மார்க் ஆண்டனி படத்துக்கு, முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாம். மேலும், வரும் நாட்களிலும் மார்க் ஆண்டனி வசூல் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மார்க் ஆண்டனி ஓடிடி ரைட்ஸும் பல கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X