Mark Antony Box Office: வசூல் மழையில் விஷாலின் மார்க் ஆண்டனி... 2வது நாளில் அதிகரித்த கலெக்ஷன்!
சென்னை: விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் 15ம் தேதி வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் நாளை விட இரண்டாவது நாளில் மார்க் ஆண்டனி வசூல் அதிகரித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மார்க் ஆண்டனி இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: விஷால், எஸ்ஜே சூர்யா காம்போவில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம், கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. இவர்களுடன் ரித்து வர்மா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான மார்க் ஆண்டனி படத்துக்கு, அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள மார்க் ஆண்டனி, சயின்ஸ் பிக்ஷன் ஜானரில், டைம் ட்ராவல், ஆக்ஷன் ப்ளஸ் காமெடி என ரசிகர்களுக்கு வெரைட்டியான ட்ரீட் கொடுத்துள்ளது. முக்கியமாக எஸ்ஜே சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பில் தியேட்டரில் ரசிகர்கள் செம்மையாக என்ஜாய் செய்து வருகின்றனர். இடைவேளை சீன், சில்க் ஸ்மிதா வரும் காட்சி என கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்சர் விளாசியுள்ளார் எஸ்ஜே சூர்யா.
இதனையடுத்து மார்க் ஆண்டனி படத்துக்கு முதல் நாளில் இருந்தே மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது. பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சம்பவம் செய்துள்ளது மார்க் ஆண்டனி. அதன்படி, இந்தப் படம் முதல் நாளில் 7 முதல் 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஷாலின் படத்துக்கு கிடைத்த சிறப்பான ஓபனிங் இது என சொல்லப்படுகிறது.
மார்க் ஆண்டனி படத்துக்கு முதல் நாளில் கிடைத்த வரவேற்பால், இரண்டாவது வசூல் அதிகரித்துள்ளதாம். முதல் நாளில் 9 கோடி வரை வசூலித்த மார்க் ஆண்டனி, இரண்டாவது நாளில் 11 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இரண்டே நாளில் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது மார்க் ஆண்டனி. இந்தப் படம் 40 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











