Mark Antony BoxOffice: 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த மார்க் ஆண்டனி... சம்பவம் செய்த விஷால்!

சென்னை: விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால், மார்க் ஆண்டனி படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் தரமான ஓபனிங் கிடைத்தது.

இந்நிலையில், படம் வெளியாகி 18 நாட்களில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது.

 Mark Antony Box Office: Vishals Mark Antony has collected Rs 100 crores

100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த மார்க் ஆண்டனி: விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷாலுடன் எஸ்ஜே சூர்யாவும் லீடிங் ரோலில் நடித்திருந்தார். விஷால், எஸ்ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடங்களில் நடித்த மார்க் ஆண்டனி, ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது.

டைம் ட்ராவலை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். மார்க் ஆண்டனி ட்ரெய்லர் வெளியான போதே, படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 15ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படத்துக்கு முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் தரமான சம்பவம் செய்தது.

 Mark Antony Box Office: Vishals Mark Antony has collected Rs 100 crores

பக்கா கமர்சியலான திரைக்கதையும், எஸ்ஜே சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பும் மார்க் ஆண்டனி படத்துக்கு பெரிய ஓபனிங் கொடுத்தது. இதனால், முதல் நாளில் 10 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்த மார்க் ஆண்டனி, இரண்டாவது நாளில் 12 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்தது. இந்நிலையில் மார்க் ஆண்டனி தற்போது 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது.

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஷாலுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளது மார்க் ஆண்டனி. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மார்க் ஆண்டனி, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலுமே இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதேபோல், ஓடிடி ரைட்ஸ் பிஸினஸிலும் மார்க் ஆண்டனி பல கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளதாம்.

முன்னதாக மார்க் ஆண்டனி படத்தின் இந்தி வெர்ஷன் சென்சாருக்காக, லஞ்சம் கொடுத்தேன் என விஷால் வீடியோ வெளியிட்டிருந்தார். 6.5 லட்சம் கொடுத்தே மார்க் ஆண்டனி படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கினேன் என விஷால் கூறியது, திரையுலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அதன்பின்னர் விஷாலின் புகார் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X