Mark Antony BoxOffice: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் மார்க் ஆண்டனி... 3வது நாள் வசூல் இதுதான்
சென்னை: 15ம் தேதி வெளியான விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம், வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் விஷாலுடன் எஸ்ஜே சூர்யாவும் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளார்.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஆக்ஷனும் காமெடியும் கலந்து உருவாகியுள்ள மார்க் ஆண்டனிக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது.
இதனால், முதல் மூன்றே நாட்களில் படத்தின் பட்ஜெட்டை வசூலித்து சாதனை படைத்துள்ளது மார்க் ஆண்டனி.

மார்க் ஆண்டனி 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ்: விஷால், எஸ்ஜே சூர்யா லீடிங் கேரக்டரில் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம், 15ம் தேதி வெளியானது. இவர்களுடன் ரித்து வர்மா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். டைம் ட்ராவலை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஸன் படமாக இயக்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். மார்க் ஆண்டனி ட்ரெய்லர் வெளியான போதே, படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
அதன்படி, வெள்ளிக்கிழமை வெளியான மார்க் ஆண்டனி, ரசிகர்களுக்கு மஜாவான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. விஷால் - எஸ்ஜே சூர்யாவின் காம்போவை வைத்துக்கொண்டு செம்ம வெரைட்டியாக விருந்து கொடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில், டைம் ட்ராவல், ஆக்ஷன் ப்ளஸ் காமெடியாக உருவாகியுள்ளது. டைம் ட்ராவல் போன் மூலம் எதிர் காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் சென்று வருவதும், அதனால் என்ன நடக்கிறது என்பதையும் காமெடியாக விவரிக்கிறது மார்க் ஆண்டனி.
சயின்ஸ் படமாக இருந்தாலும், அதுகுறித்த விளக்கங்களை கொடுத்து ரசிகர்களை சோதிக்காமல், ஜாலியான திரைக்கதையால் மாஸ் காட்டுகிறது. முக்கியமாக தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்த்துவிட்டார் எஸ்ஜே சூர்யா. அவருக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் கிடைத்துள்ளது.
கலவையான விமர்சனங்கள், தொடர் விடுமுறை காரணமாக மார்க் ஆண்டனி படத்தின் வசூல் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுள்ளது. முதல் நாளில் 7 முதல் 9 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளது. அதேபோல், இரண்டாவது நாளும் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் 12 கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது.
இந்த வரிசையில் மூன்றாவது நாளான நேற்றைய தினத்தின் வசூல் நிலவரமும் தெரியவந்துள்ளது. அதன்படி மூன்றாவது நாளில் 12 முதல் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம் மார்க் ஆண்டனி. முதல் நாளில் இருந்தே படிப்படியாக கூடியுள்ளது மார்க் ஆண்டனி வசூல். ஆகமொத்தம் முதல் மூன்று நாட்களில் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாம். மார்க் ஆண்டனி படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி ரூபாய் என சொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











