லோகேஷ் கனகராஜ், நெல்சனுக்கு இந்த விஷயத்துல டஃப் கொடுத்த மார்க் ஆண்டனி இயக்குநர்.. என்ன மேட்டர்?
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குநர்களின் பாய்ச்சல் பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட இளம் இயக்குநர்கள் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் மாறியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கே டாப் கொடுக்கும் விதமாக மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் ஆதிக் ரவிச்சந்திரன் அப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளார் என ரசிகர்கள் மீம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்: ஜிவி பிரகாஷ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்தின் டைட்டிலிலேயே ரசிகர்களை கவர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக சிம்புவை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்கிற பில்டப்புகள் பலரையும் வெகுவாக ஈர்த்தது.
AAA வருவது போல அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவுக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிதும் ஏமாற்றத்தை அளித்தது.
டாப் இயக்குநர்களுக்கே டஃப்: அதன் பின்னர், பிரபுதேவாவை பல கெட்டப்புகளில் சைக்கோ கொலைகாரனாக காட்டி 8 நடிகைகளை நடிக்க வைத்து உருவாக்கிய பஹீரா திரைப்படமும் பயமுறுத்த தவறியது. இந்நிலையில், மார்க் ஆண்டனி படம் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆதிக் ரவிச்சந்திரன் நம்பியதை போலவே அவரது வாழ்க்கையை தற்போது மாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய பழைய பாடல்கள் ஃபார்மேட்டை ஜெயிலர் படத்தில் நெல்சன் வில்லன் வர்மன் கேங்குக்கு வைத்து மாஸ் காட்டிய நிலையில், அந்த இருவரையும் தூக்கி சாப்பிடும் வகையில் மார்க் ஆண்டனி படத்தில் "வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது", "அடியே மனம் நில்லுனா நிக்காதடி" மற்றும் "பஞ்சுமிட்டாய் சீலை கட்டி" உள்ளிட்ட ரெட்ரோ பாடல்களை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை ரிப்பீட் மோடில் படம் பார்க்க வைத்து விட்டார் ஆதிக் ரவிச்சந்திரன் என்கிற மீம் தற்போது இணையத்தில் தீயாக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications











