Vishal: தமிழ்ல டிஆர்.. தெலுங்குல யார் தெரியுமா.. பார்க்கலாம் வாங்க!

சென்னை: நடிகர்கள் விஷால், ரித்து வர்மா, எஸ்ஜே சூர்யா, சுனில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

படம் டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளனர்.

Mark Antony first single in Telugu sung by Actor Vishal and the promo of the song released

மார்க் ஆண்டனி படத்திற்காக தெலுங்கில் பாடல் பாடிய விஷால்: நடிகர் விஷால், ரிது வர்மா, எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டைம் ட்ராவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை தமிழில் பிரபல இயக்குநர் டிஆர் பாடியுள்ளார். இதற்கான ப்ரமோ வெளியாகி ட்ரெண்டான நிலையில் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிருதுடா எனத் துவங்கும் இந்தப் பாடலின் ப்ரமோவில் டிஆர் சில வரிகளை பாடியுள்ளார். இந்தப் ப்ரமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் தெலுங்கிலும் இந்தப் பாடலை செலபிரிட்டி பாடகரை வைத்து பாட வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்ட நிலையில், அதிரடியான இந்தப் பாடலை யாரைக் கொண்டு தெலுங்கில் பாட வைக்கலாம் என அவருக்கு குழப்பம் ஏற்பட்டதாகவும் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கும் இதுகுறித்த ஐடியா இல்லாத நிலையில், பாடலை விஷாலை வைத்தே பாட வைக்க அவர் முடிவெடுத்ததாகவும் தற்போது ப்ரமோ வெளியாகியுள்ளது.

Mark Antony first single in Telugu sung by Actor Vishal and the promo of the song released

தெலுங்கில் இந்தப் பாடலை நடிகர் விஷால் பாடியுள்ளார். அவரது வாய்ஸ் பாடலுக்கு சிறப்பாகவே பொருந்தியுள்ளது. அதரதா என துவங்கும் இந்தப் பாடலும் நாளை மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடும் வீடியோவை சமீபத்தில் விஷால் வெளியிட்டிருந்தார். முன்னதாக படம் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

முன்னதாக த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன், அசராதவன், அடங்காதவன் போன்ற படங்களை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்நிலையில் தற்போது விஷால் படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று நம்பலாம். அதிரடி ஆக்ஷன் களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவரும் விஷாலுக்கு கடந்த சில படங்கள் சரியாக கைக்கொடுக்காத நிலையில், மார்க் ஆண்டனி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X