பயில்வான் ரங்கநாதனை உயிரோடு கொளுத்தனும்.. ஆவேசமாக பேசிய பிரபல நடிகர்!

சென்னை: நடிகை நடிகர்களை தவறாக பேசும் பயில்வான் ரங்கநாதனை உயிரோடு கொளுத்த வேண்டும் என்று விஷால் பேசி உள்ளார்.

விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. ரூ.100 கோடி வசூலை அள்ளி வருகிறது. மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் விஷால் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்து வருகின்றார்.

Mark Antony hero Vishal said about actor bayilvan ranganathan

நடிகர் விஷால்: அப்போது செய்தியாளர் ஒருவர் 19 வருடம் ஆகிவிட்டது. இப்போது வரை உங்கள் கல்யாணம் குறித்து நீங்கள் அறிவிக்கவில்லை. இதுவரை நிறைய ஹீரோயின்களுடன் நடித்துள்ளீர்கள். ஆனால் ஒரு ஹீராயினுடனும் காதல் வரவில்லையா? உங்களை நிறைய ஹீரோயின்களுடன் தொடர்பு படுத்தி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் என்றார்.

வதந்தியை பரப்ப வேண்டாம்: இதற்கு பதில் அளித்த விஷால் நானும் லட்சுமி மேனனும் நல்ல நண்பர்கள், லட்சுமி மேனன் நடிகை என்பதை தாண்டி அவர் ஒரு பெண். அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுமாதிரியான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

பிரிவுக்கு காரணம்: விஷால் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பகிரங்கமாக விளக்கம் கொடுத்த போதும், பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ள வீடியோவில், லட்சுமி மேனன் மற்றும் விஷால் வழக்கம் போல் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். விஷாலும் லட்சுமி மேனனும் காதலித்தார்கள். இருவரும் திருமணம் செய்து கொள முடிவு செய்தனர். ஆனால் திடீரென்று அவர்களது திருமணம் நின்றுவிட்டது. இதனால் லட்சுமி மேனன் தனது சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்ப சென்றுவிட்டார் என கூறியிருந்தார்.

கொளுத்த வேண்டும்: என்னத்தான் விளக்கம் கொடுத்தும் சிலர் அவங்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். வருகிற போகியில் பழைய பொருட்களுடன் சேர்த்து பயில்வானை கொளுத்த வேண்டும் என்பது என் ஆசை. நாம் யாரை பற்றி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் அதற்கும் எல்லை இருக்கிறது. அவருக்கும் மனைவி, மகள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X