Mark Antony: மார்க் ஆண்டனி ரிலீஸுக்கு தடை... விஷால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Mark Antony: High Court bans Vishals Mark Antony film release

மார்க் ஆண்டனி ரிலீஸுக்கு தடை: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஸன் ப்ளஸ் ஆக்‌ஷன்-காமெடி ஜானரில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர், சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால், மார்க் ஆண்டனி படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரும் 15ம் தேதி மார்க் ஆண்டனி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லைகா நிறுவனத்துக்கு விஷால் கொடுக்க வேண்டிய கடனை திருப்பிச் செலுத்தாததால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால் செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளது. தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது.

அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடுவதாக, விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி, விஷால் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

 Mark Antony: High Court bans Vishals Mark Antony film release

இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, விஷால் தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வரும் 15ம் தேதி வெளியிட உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 2022ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும், அப்போது தன்னிடம் எந்த நிதி ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்த விஷால், அன்றைய தினம் மினி ஸ்டூடியோ நிறுவன உரிமையாளர் வினோத் குமாரிடம் இருந்து 1 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், இதன்மூலம் நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளதாகவும் லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார். இதனால், விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் சொன்னபடி வெளியாகுமா என்பது தெரியவில்லை. இதனிடையே செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்த ராகவா லாரன்ஸின் சந்திரமுகி, வரும் 28ம் தேதி ரிலீஸாகும் என லைகா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X