நல்லவேளை என் அனகொண்டாவுக்கு ஒண்ணும் ஆகல.. நைட்டியுடன் ரிது வர்மா.. என்ன விஷாலே இப்படி சொல்றாரே!
சென்னை: திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. அந்த படத்தின் "ஐ லவ் யூ டி" பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன் நடிப்பில் டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை விஷால் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

தொடர்ந்து 6 படத்துக்கு மேல் அவுட்டான நிலையில், இந்த முறை மிஸ் ஆகாது என இறங்கி ஆடியிருக்கிறார்.
பாடகரான இயக்குநர்: ஹீரோக்கள் மட்டும் தான் பாட்டு பாடணுமா என்ன என முடிவு செய்து இந்த படத்தின் மூலம் பாடகராகவும் ஆதிக் ரவிச்சந்திரன் அசத்தி உள்ளார். பிட்டு படம் டி பாடலுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஐ லவ்யூ டி பாடலை உருவாக்கி உள்ள நிலையில், அதன் விஷுவல்ஸும் பாடலின் லிரிக்ஸும் ரசிகர்களை முதல்முறை கேட்ட நொடியிலே வைப் செய்ய வைக்கிறது.

நைட்டியுடன் ரிது வர்மா டான்ஸ்: திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் எப்படி நைட்டியுடன் கயல் ஆனந்தியை கவர்ச்சி பொங்க ஆட வைத்திருந்தாரோ ஆதிக் ரவிச்சந்திரன் அதை விட மோசமாக ரிது வர்மாவை நைட்டியுடன் நடுரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட வைத்துள்ளார்.
பஜாரி, மூடு வரல என மோசமான வரிகளுடன் சர்ச்சையை கிளப்பும் பாடலாகவும் இந்த ஐ லவ்யூ டி பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணகொண்டாவுக்கு ஒண்ணும் ஆகல: அடிடா அவளை, ஒய் திஸ் கொலவெறி பாணியில் உருவாகி உள்ள இந்த பாடலின் இறுதியில் ரிது வர்மா விஷால் மீது பைக்கை ஏற்றுவது போல வந்து, கடைசியில் பிரேக் போட்டு நிறுத்த, உடனடியாக "நல்லவேளை என் அனகொண்டாவுக்கு ஒண்ணும் ஆகல" என விஷால் பேசும் அந்த இறுதி வசனம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
ஸ்ரீரெட்டி பேசியதில் இருந்தே நடிகர் விஷாலை அனகொண்டா என பலரும் ட்ரோல் செய்து வந்த நிலையில், செல்ஃப் ட்ரோலாகவே அதனை விஷால் மாற்றி விட்டாரே என ரசிகர்கள் அந்த பாடலை ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











