OTT Release: ரிமோட்டை கையில் வச்சிக்கோங்க.. ஓடிடியில் இன்று வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளதால், இந்த வாரம் எந்த படமும் வெளியாகவில்லை.

திரையரங்கில் எந்த படமும் வெளியாகாததால், ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு படங்களை இன்று வெளியிட்டு வருகின்றன.

Mark Antony, mathagam part 2 and The Great Indian Suicide Ott Released Today List

அந்த வகையில், இந்த வார வீக் எண்டை சிறப்பானதாக்க இன்று பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

மார்க் ஆண்டனி: விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் செப்டம்பர் 15ந் தேதி வெளியானது. இப்படம் வசூலை வாரிக்குவித்த நிலையில் இன்று அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

மத்தகம் 2: இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி ஆகியோர் நடிப்பில் உருவான மத்தகம் முதல் சீசன் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் வரும் 12ந் தேதி தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.

காசர்கோல்ட்: மலையாளத் திரைப்படமான காசர்கோல்ட் கடந்த மாதம் திரையரங்கில் வெளியானது. ஆல்பி, அலெக்ஸ் மற்றும் ஃபைசல் ஆகியோர் மூன்று நண்பர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பேராசை மற்றும் ஆசைகள் காரணமாக அவர்களின் நட்பு எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி உள்ளார். இத்திரைப்படத்தை நெட்ப்லிக்ஸ் தளத்தில் இன்று பார்க்கலாம்.

தி கிரேட் இந்தியன் சூசைட்: கிரைம், திரில்லர் திரைப்படமான தி கிரேட் இந்தியன் சூசைட் திரைப்படம், தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக இன்று ஆஹா ஓடிடி தளத்தில் இன்று நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் ராம் கார்த்திக் மற்றும் ஹெபா படேல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மதனப்பள்ளியில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகவைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

ப்ரேம விமானம்: அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் ZEE5 இணைந்து உருவாக்கி உள்ள வெப் தொடர் தான் பிரேம விமானம். விமானத்தில் பறக்க வேண்டும் என்று கனவு காணும் இரண்டு இருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்ற கதைக்களத்துடன் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொடரை இன்று முதல் ZEE5 தளத்தில் பார்க்கலாம்.

வீக் எண்ட் ஸ்பெஷல்: மேலும், தி பரியல் அமேசான் பிரைமிலும், கொரியத் திரைப்படமான ஃபான்டோம் சோனி லிவ்விலும்,ஸ்வீடன் திரைப்படமான தி கான்ப்ரன்ஸ் நெட்ப்லிக்ஸ் தளத்திலும் பார்க்கலாம். இந்த வார வீக் எண்டை மகிழ்ச்சியாக ஜாலியாக கொண்டாடி மகிழுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X