Mark Antony memes: ஆதிக் ரவிச்சந்திரனை அலேக்காக தூக்கி கொண்டாடும் ஃபேன்ஸ்.. ஒரே மீம்ஸா பறக்குது!

சென்னை: மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் 7.9 கோடி ரூபாய் என அப்டேட் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும், உலகளவில் 10 கோடி ரூபாய் வசூலை மார்க் ஆண்டனி முதல் நாளில் ஈட்டியிருக்கும் என்கின்றனர்.

நடிகர் விஷாலுக்கு இந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங் படமாக அமைந்துள்ளது. படத்திற்கு முதல் நாள் கிடைத்த ஓபனிங்கை பார்த்தே விஷால், எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் பிரபுதேவா நடித்த பஹீரா திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் மூலம் இயக்குநராக மாஸ் காட்டி உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன் என ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

விழுந்தாலும் எழுவோம்: நடிகர் அஜித் போல விழுந்தாலும், மறுபடி எழுந்து வருவோம் என விடாமுயற்சி விபத்து காட்சிகளுடன் ஆதிக் ரவிச்சந்திரனை ஒப்பிட்டு முந்தைய படங்கள் அட்டு ஃபிளாப் ஆகினாலும், இந்த முறை மார்க் ஆண்டனி மூலமாக ஹிட்டு கொடுத்து விட்டார் என கொண்டாடி வருகின்றனர்.

Mark Antony memes trending in social media, fans praising Aadhik Ravichandran

இறங்கி ஆடு கபிலா: AAA மற்றும் பஹீரா என மரண சம்பவம் பண்ண ஆதிக் ரவிச்சந்திரனா இப்படி மரண மாஸ் சம்பவம் பண்ணியிருக்கிறார் மார்க் ஆண்டனி படத்தில் என சார்பட்டா பரம்பரை மீம்ஸையும் போட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சிலுக்கை பார்க்க கூட்டம் கூடுது: 80களில் எப்படி சில்க் ஸ்மிதாவை தியேட்டரில் பார்க்க கூட்டம் கூடியதோ அதே போல சில்க் ஸ்மிதாவின் ரீக்ரியேஷனை மார்க் ஆண்டனி படத்தில் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர் என்றும் பழைய பீஸ்கள் அதிகமாக படையெடுத்து வருவதாக வீடியோ மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

Mark Antony memes trending in social media, fans praising Aadhik Ravichandran

மொரட்டு கம்பேக்: சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்புவின் படங்களின் முதல் நாள் வசூலை விட அதிக வசூலை விஷாலின் மார்க் ஆண்டனி வசூலித்து மொரட்டு கம்பேக் கொடுத்திருப்பதாக விஷால் ரசிகர்கள் வெயிட்டு காட்டி வருகின்றனர்.

Mark Antony memes trending in social media, fans praising Aadhik Ravichandran

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X