Vishal: சம்பளம் வாங்கினோமா? நடித்தோமானு? இருக்கக்கூடாது.. நயன்தாராவை மறைமுகமாக விளாசிய விஷால்!
சென்னை: படத்தின் ப்ரோமோஷனுக்காக வராமல் இருப்பது சரியான பழக்கம் இல்லை என நடிகர் சங்க தலைவரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் நயன்தாராவை மறைமுகமாக திட்டி உள்ளார்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தில், விஷால், எஸ்ஜே சூர்யா, அபிநயா, சுனில் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரூ.100 கோடி: மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15ந் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. விஷாலின் அப்பா, மகன் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம், எல்லா இடங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது.
விஷால் பேச்சு: இதனைக் கொண்டாடும் வகையில் சென்னையில் நேற்று வெற்றி விழா நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஷால், மார்க் ஆண்டனி படத்தின் மூலம் நான் இழந்தவற்றில் 75 விழுக்காடு எனக்கு திரும்ப கிடைத்துள்ளது என்றார்.
தனிப்பட்ட விருப்பம்: இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷாலிடம், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்கிற முறையில், நடிகர் நடிகைகள் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ளாதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த, நடிகர் விஷால், அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு அது கூடுதல் பலமாக இருக்கும் என்றார்.
வேதனைப்படுகிறேன்: தொடர்ந்து பேசிய விஷால், படத்தின் பிரமோஷனுக்கு வருவதால் அவருக்கு ஒன்னும் குறைந்துவிடாது, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடு ரோடு அல்லது தெருக்கோடியில் நடத்தப்படுவதில்லை. நட்சத்திர ஹோட்டலில் ஏசி அரங்கில் எந்த குறையும் இல்லாமல் தான் நடந்து வருகிறது. ஆனால், சம்பளம் வாங்கினோமா? நடித்தோமானு? தெனாவெட்டாக இருக்கும் நடிகைகள் பற்றி ஒரு தயாரிப்பாளராக நான் வேதனைப்படுகிறேன் என்று நடிகை நயன்தாராவை மறைமுகமாக நடிகர் விஷால் விளாசினார்.


Click it and Unblock the Notifications











