கேக் கொண்டுவாங்க கட் பண்ணிரலாம்.. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு!

சென்னை: மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வெற்றிநாயகனாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்.

விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.

Mark Antony movie success celebration cake cutting

நடிகர் விஷால்: அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாகீரா, செம உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில பிரபலமான இயக்குநர் ஆனார் ஆதிக் ரவிச்சந்திரன். இவர், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து டைம் டிராவல் கதையில் மார்க் ஆண்டனி படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியான போதே ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

நல்ல விமர்சனம்: தமிழகத்தில் 500 ஸ்கிரீனில் நேற்று மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. உலகளவிலும் பல திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ11.55 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான விஷால் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

குவியும் பாராட்டு: மார்க ஆண்டனி படம், உலகளவில் 12 கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 1.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக்வும், கர்நாடகா மற்றும் இதர மாநிலங்களில் 1 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மகிழ்ச்சியில் விஷால்: இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி வருகிறது. இதில், எஸ்.ஜே. சூர்யா, விஷால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து தொடர் தோல்விப் படங்களால் துவண்டு இருந்த விஷால், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X