Silk Smitha: மார்க் ஆண்டனி படத்துல சில்க்கா நடிச்சவருக்கே இந்த நிலைமையா?.. மனம் திறந்த பேட்டி!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் டைம் மெஷின் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது.

பீரியட் படமாக உருவாகும் அந்த படத்தில் ஒரு சீனுக்கு மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவையே இறக்கும் முயற்சியில் ஆதிக் ரவிச்சந்திரன் வெற்றிக் கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

Mark Antony Silk Smitha lookalike actress Vishnu Priya Gandhi talks about her body shaming troll

தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஈஸ்டர் எக்காக வைக்காமல், டிரெய்லரிலேயே சில்க் சீனை காட்டி மிரட்டி விட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்நிலையில், சில்க் ஸ்மிதாவாக நடித்த சில்க் ஸ்மிதா போலவே தோற்ற ஒற்றுமை கொண்ட நடிகை விஷ்ணு பிரியா காந்தி அளித்த பேட்டி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

மாஸ் காட்டுமா மார்க் ஆண்டனி?: நடிகர் விஷால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என ரொம்பவே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். திரிஷா இல்லைன்னா நயன்தாரா, அடங்காதவன் அன்பானவன் அசராதவன், பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் என்பதால் ஆரம்பத்தில் ரசிகர்கள் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு வைக்காத நிலையில், அந்த சில்க் ஸ்மிதா போர்ஷன் உடன் வெறித்தனமாக கட் செய்யப்பட்ட டிரெய்லர் வெளியானதுமே படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி விட்டது.

Mark Antony Silk Smitha lookalike actress Vishnu Priya Gandhi talks about her body shaming troll

மீண்டும் சில்க்: 80களில் எல்லா படங்களிலும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை நிறைந்திருந்த கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா பற்றி இப்போதும் ரசிகர்கள் ஆர்வமாக பல விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். சில்க் ஸ்மிதாவின் பயோபிக்காக வெளியான டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். அந்த படத்துக்கு தேசிய விருதே கிடைத்தது தான் மிகப்பெரிய ஹைலைட்.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தில் மீண்டும் சில்க் ஸ்மிதாவை சிஜி உதவியுடன் காட்டி ரசிகர்களை கிறங்கடிக்க காத்திருக்கின்றனர்.

Mark Antony Silk Smitha lookalike actress Vishnu Priya Gandhi talks about her body shaming troll

சில்க் மாதிரி சிரிப்பது கஷ்டம்: நடிகை சில்க் மாதிரியே look alike ஆக வாழ்ந்து வரும் விஷ்ணுப்பிரியா காந்தி தான் இந்த படத்தில் சில்க் போல நடித்துள்ளார். அந்த டிரெய்லரில் வரும் கண்கள் எல்லாம் அப்படியே என்னோட சீன் தான் என்றும் இயக்குநர் சொல்ல சொல்ல 2 நாள் கஷ்டப்பட்டு அதை பிராக்டீஸ் செய்து நடித்தேன். ஆனால், சில்க் போல சிரிப்பது தான் ரொம்பவே கஷ்டம் என்றார்.

Mark Antony Silk Smitha lookalike actress Vishnu Priya Gandhi talks about her body shaming troll

பாடி ஷேமிங்: சில்க் மாதிரி நடித்த நடிகை விஷ்ணுப்பிரியா காந்திக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் நீங்க சில்க் மாதிரி தான் இருக்கீங்க, ஆனால், ரொம்பவே குண்டாக இருக்கீங்க என பாடி ஷேமிங் செய்து வருகின்றனராம். ஆனால், அதையெல்லாம் பெரிதாக கருதவில்லை என்றாலும், இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்த பின்னர் என்னோட வெயிட்டை குறைக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். கூடிய சீக்கிரமே ரியல் சில்க்கை போலவே ஸ்லிம்மாகவும் மாறிவிடுவேன் என்ற விஷ்ணுப்பிரியா சில்க் அணியும் உடைகளிலேயே தனக்கு கவுன் தான் ரொம்ப பிடிக்கும் என்றும் தன்னிடம் நிறைய கவுன்கள் உள்ளதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மார்க் ஆண்டனி படத்தில் சில்க் வரப்போகும் சீனில் சும்மா தியேட்டர் எல்லாம் விசில் சத்தத்தில் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X