Silk Smitha: சில்க் சீனுக்கு தியேட்டரே சும்மா சிலிர்க்குதே.. மார்க் ஆண்டனியில் மாஸ் சம்பவம்!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இன்னமும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேசை சரியான சமயத்தில் மார்க்கெட் படத்தில் வைத்து பயன்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா, செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று வெளியானது. படத்தின் இரண்டாம் பாதி முழுக்க தியேட்டரில் ஒரே சிரிப்பு சத்தம் தான் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

அதிலும் நடிகை சில்க் ஸ்மிதா போர்ஷன் தான் வெறித்தனத்தின் உச்சம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சில்க் ஸ்மிதா: ஆந்திராவில் பிறந்து வளர்ந்த விஜயலட்சுமி வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்திய அளவில் பல படங்களில் நடித்து வந்த சில்க் ஸ்மிதா ஒரு கட்டத்தில் புகழின் உச்சிக்கே சென்று விட்டார். ஆனால் அதுவே அவர் இளம் வயதில் மரணிக்க காரணமாகவும் அமைந்துவிட்டது.
சில்க் ஸ்மிதாவின் மரணத்தில் இன்னமும் மர்மம் இருப்பதாக ரசிகர்கள் நம்பி வருகின்றனர். பல முன்னணி நடிகர்களுடன் 80 காலகட்டத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி பிரபலமானவர் சில்க் ஸ்மிதா.
மார்க் ஆண்டனி சீன்: இன்றைக்கும் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் இரண்டாம் பாதியில் சில்க் ஸ்மிதா வரும் அந்த பஸ் காட்சி தியேட்டரையே தெறிக்க விட்டுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ரசிகர்கள், சில்க்.. சில்க்.. சில்க்.. என்று சொல்லிக் கொண்டு வருவதெல்லாம் மற்ற நடிகைகளுக்கு எல்லாம் எப்போதும் கனவு தான் என்கின்றனர்.
தியேட்டரே தெறிக்குது: கேங்ஸ்டர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா பேருந்து ஒன்றில் செல்லும்போது சில்க் ஸ்மிதா வரும் காட்சியை தியேட்டரில் இருந்து வீடியோவாக எடுத்து ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்தக் காட்சிக்கு தியேட்டரே எப்படி விசிலை பறக்க விட்டது என்பதை காட்டி வருகின்றனர்.
80ஸ் திரைப்படம் என்றாலே சில்க் இல்லாத படங்கள் இல்லை என்கிற நிலை இருந்த நிலையில் அந்த காலகட்டத்திற்கு டைம் டிராவல் செய்து போனால், அந்தப் படத்தில் சில்க் இல்லாமல் எப்படி என்பதை நினைத்து ஆதிக் ரவிச்சந்திரன் சில்க் ஸ்மிதா போன்று உருவ ஒற்றுமை உள்ள விஷ்ணுபிரியா காந்தியை பயன்படுத்தி அந்த காட்சியை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











