Mark Antony: மார்க் ஆண்டனி படத்துக்காக தொடர்ந்து 22 மணி நேரம்... SJ சூர்யா செய்த சிறப்பான சம்பவம்!

சென்னை: இயக்குநராக அறிமுகமாகி இப்போது நடிகராக மாஸ் காட்டி வருகிறார் எஸ்ஜே சூர்யா.

ஹீரோ, வில்லன், காமெடி என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து கெத்து காட்டுகிறார்.

தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் எஸ்ஜே சூர்யா.

இந்தப் படத்திற்காக தொடர்ந்து 22 மணி நேரம் டப்பிங் கொடுத்து அசத்தியுள்ளாராம்.

 Mark Antony: SJ Suryah has done 22 hours of Non-Stop Dubbing for Mark Antony

தொடர்ந்து 22 மணி நேரம் டப்பிங்: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷாலுடன் எஸ்ஜே சூர்யா மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர்களுடன் செல்வ ராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஸன் ப்ளஸ் ஆக்‌ஷன்-காமெடி ஜானரில் உருவாகியுள்ளது மார்க் ஆண்டனி. இந்தப் படத்தின் ட்ரெய்லர், சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இதனால், வரும் 15ம் தேதி வெளியாகும் மார்க் ஆண்டனி படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. லைகா நிறுவனத்துக்கு விஷால் கொடுக்க வேண்டிய கடனை திருப்பிச் செலுத்தாததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மார்க் ஆண்டனி சொன்ன தேதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் கடைசி நேரம் வரை தாமதமானதாகத் தெரிகிறது. முக்கியமாக எஸ்ஜே சூர்யாவின் டப்பிங் போர்ஷன் முடியாமல் இருந்துள்ளது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் என பல படங்களில் பிஸியாக நடித்து வரும் எஸ்ஜே சூர்யா, மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங் கொடுக்க முடியாமல் திணறி வந்துள்ளார். இதனிடையே அவரது நெருங்கிய நண்பரான நடிகர் மாரித்துவும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்த எஸ்ஜே சூர்யா, தற்போது மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டாராம். அதாவது தொடர்ச்சியாக 22 மணி நேரம் வரை டப்பிங் பேசியுள்ளார் எஸ்ஜே சூர்யா. இதனைப் பார்த்து படக்குழுவினரே மிரண்டு விட்டார்களாம். முன்னதாக மார்க் ஆண்டனியில் நடிக்க கமிட்டானது குறித்து பேசியிருந்த எஸ்ஜே சூர்யா, இந்தப் படத்தின் கதையை கேட்டதும் ரொம்பவே என்ஜாய் செய்தேன்.

தனது கேரியரில் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே உடனடியாக கால்ஷீட் கொடுத்தேன் என்றிருந்தார். அதன்படியே மார்க் ஆண்டனி ட்ரெய்லரில் செம்ம வெரைட்டியாக கலங்கடித்திருந்தார் எஸ்ஜே சூர்யா. படம் வெளியானதும் எஸ்ஜே சூர்யாவின் நடிப்புக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X