லக்ஷ்மி ஸ்ட்ரைக் ரேட்டே வேற.. 2வது நாளே ஃபர்ஸ்ட் நைட் சீன்.. நடுங்கிட்டேன்.. விஷால் ஓபன் டாக்!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, சுனில் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை (செப். 15) வெளியாகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தப் படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் நடிகர் விஷால். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக தியேட்டர்களை மார்க் ஆண்டனி திரைப்படம் கைப்பற்றியுள்ளது.

சந்திரமுகி 2 திரைப்படம் போட்டியிலிருந்து விலகிய நிலையில், இந்த வாரம் சுமார் நான்கு நாள் வசூலை சோலோவாக வேட்டையாடப் போகிறார் விஷால். இந்நிலையில் அந்த படத்திற்காக தொடர்ந்து, பல யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார் விஷால்.
நடிகைகளுக்கு மார்க் போட்ட மார்க் ஆண்டனி: சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு விஷால் ரேட்டிங் போட்டுள்ளார். அதில், நடிகை லட்சுமி மேனன் ஸ்ட்ரைக் ரேட்டே வேற என 5க்கு 5 மார்க் முதல் முறையாக அவர் புகைப்படம் வந்தபோதே கொடுத்துவிட்டார்.
நடிகைகள் திரிஷா, சமந்தா, நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரீமா சென் என தன்னுடன் இணைந்து நடித்த அனைத்து நடிகைகள் பற்றியும் நல்ல விஷயங்களையும் சுவாரஸ்யமான தகவல்களையும் கொண்டு வெளிப்படையாக அவர்கள் பற்றி பேசிய விஷாலின் பேட்டி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஃபர்ஸ்ட் நைட் சீன்ல நடிக்க நடுங்கினேன்: செல்லாமே படத்தில் விஷால் அறிமுகமான நிலையில், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரீமா சென் நடித்திருந்தார். "டைரக்டர் நான் தான் படத்தின் ஹீரோ என ரீமாவிடம் அறிமுகப் படுத்திய நிலையில், ஜஸ்ட் ஹாய் மட்டும் சொல்லிட்டு போயிட்டார். ரெண்டாவது நாளே இயக்குநர் காந்தி கிருஷ்ணா எனக்கும் ரீமாவுக்கும் ஃபர்ஸ்ட் நைட் சீன் வச்சிட்டாரு.. இப்போ தான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன், கொஞ்ச நாள் கழிச்சு இந்த சீன் எடுக்கலாமேன்னு கேட்டேன்.. இது நீ நினைக்கிற மாதிரி மோசமான சீனெல்லாம் இல்லை.. நல்லா இருக்கும் வந்து நடின்னு கூலா சொல்லிட்டுப் போயிட்டாரு..

பெட்ல, பெட்சீட்டுக்குள்ள ரீமாவுடன் படுத்து நடிக்கணும், எனக்கு கை கால் எல்லாம் நடுங்கிடுச்சு.. அப்புறம் ஒரு நாள் நானும் ரீமாவும் உட்கார்ந்து பேசிட்டு இருக்கும் போது, எனக்கு ஒண்ணு தோணுது விஷால் சொல்லவான்னு கேட்டார்.. சொல்லுங்க ரீமான்னு சொன்னேன்.. தமிழ் சினிமாவுல நீங்க ஒரு பெரிய நடிகரா வருவீங்கன்னு சொன்னார்.
ஏங்க நடிக்க வந்து நாலு நாள் தான் ஆகுது, இப்டி சொல்றீங்களேன்னு கேட்டேன், எனக்கு தோணுது.. மார்க் மை வேர்ட்ஸ்னு சொன்னார் என ரீமா சென்னுடன் முதல் படத்தில் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார் விஷால்.


Click it and Unblock the Notifications











