Mark Antony: மார்க் ஆண்டனி சென்சாருக்கு லஞ்சம்... ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட விஷால்!

சென்னை: விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மார்க் ஆண்டனி இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்ததாக விஷால் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 Mark Antony: Vishal Had to pay 6.5 lakhs for Mark Antony Hindi version Censored

மார்க் ஆண்டனி பட சென்சாருக்கு லஞ்சம்: விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த 15ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்துக்கு முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்தது. டைம் ட்ராவலை பின்னனியாக வைத்து சயின்ஸ் பிக்ஸன் படமாக இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.

மார்க் ஆண்டனி ட்ரெய்லர் வெளியான போதே, படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி திரையரங்குகளில் வெளியான மார்க் ஆண்டனி, ரசிகர்களுக்கு செம்ம என்டர்டெயின்மெண்ட் ட்ரீட்டாக அமைந்தது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர் படமாக இருந்தாலும், அதுகுறித்த விளக்கங்களை கொடுத்து சோதிக்காமல், ஜாலியான திரைக்கதையால் மாஸ் காட்டியது மார்க் ஆண்டனி.

முக்கியமாக எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு மார்க் ஆண்டனி படத்தை ரசிகர்களால் கொண்டாட வைத்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இந்தப் படம், இந்தி உட்பட மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸானது. மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் சென்சாருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக விஷால் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதாவது சினிமாவில் லஞ்சம் கொடுப்பதாக காட்சிகள் வருவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் லஞ்சம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மார்க் ஆண்டனி படத்தின் இந்தி வெர்ஷன் சென்சாருக்காக, மும்பை CBFC அலுவலகத்தில் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். மார்க் ஆண்டனி சென்சார் வாங்க மீடியேட்டராக இருந்த மேனகாவுக்கு பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மகாராஷ்ட்ரா முதலமைச்சரும் பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் யாருடைய வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது என்ற விவரங்களையும் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். விஷாலின் இந்த டிவிட்டர் பதிவை ரசிகர்கள் அவர் துணிவாக புகார் கொடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X