Mark Antony: மார்க் ஆண்டனி ப்ளாக்பஸ்டர்... “டார்லிங்ஸ் எல்லோருக்கும் நன்றி..” விஷால் உருக்கம்!

சென்னை: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

மார்க் ஆண்டனி படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மார்க் ஆண்டனி வெற்றிக்காக விஷால் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 Mark Antony: Vishal thanked the fans for the success of Mark Antony film

நன்றி சொன்ன விஷால்: விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக உருவாகியுள்ளது மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. விஷாலுடன் எஸ்ஜே சூர்யாவும் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். டைம் ட்ராவல், சயின்ஸ் பிக்‌ஷன், ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடி என வெரைட்டியான கமர்சியல் படமாக வெளியான மார்க் ஆண்டனி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மார்க் ஆண்டனி படத்தில் விஷால் வெறித்தனம் காட்டினால், எஸ்ஜே சூர்யா அசுரத்தனமாக நடித்து மிரட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக ரசிகர்களுக்கான பெஸ்ட் என்டர்டெயின்மென்ட் படமாக வெளியாகியுள்ளது மார்க் ஆண்டனி. முதல் நாளில் சிறந்த ஓபனிங் கிடைத்துள்ளதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 7 முதல் 9 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால், விஷால், எஸ்ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மார்க் ஆண்டனி படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இதனையடுத்து இப்படத்தின் வெற்றியால் நெகிழ்ந்து போன விஷால், நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியிடுவதை எனது கடமையாக பார்க்கிறேன். இந்தப் படத்திற்காக அனைவருமே மொத்த உழைப்பையும் கொடுத்துள்ளோம். வெள்ளிக் கிழமையான நேற்று தெய்வங்களின் ஆசிர்வாதம் இல்லாமல் மார்க் ஆண்டனி வெற்றிப் பெற வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளார்.

 Mark Antony: Vishal thanked the fans for the success of Mark Antony film

மேலும், மார்க் ஆண்டனி படத்தை ரசிகர்கள் பாராட்டி, ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளனர். அதனைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். தியேட்டரில் பணம் கொடுத்து மார்க் ஆண்டனி படத்தைப் பார்த்த ரசிகர்கள், திருப்தியோடு திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன். தமிழ்நாடு மட்டும் இல்லாமல், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மார்க் ஆண்டனி வெற்றிப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கியமாக மார்க் ஆண்டனி படத்தை சோஷியல் மீடியாக்களில் ப்ரோமோட் செய்த நண்பர்களான டார்லிங் கார்த்தி, டார்லிங் வெங்கட் பிரபு, டார்லிங் சிம்பு என அனைவருக்கும் எனது நன்றிகள். இரண்டு வருட உழைப்புக்கு கிடைத்த இந்த வெற்றியை மறக்கவே முடியாது என்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே சொன்னபடி, மார்க் ஆண்டனி படத்தின் ஒவ்வொரு டிக்கெட் வசூலில் இருந்து ஒரு ரூபாய் எடுத்து, அதனை விவசாயிகளுக்கு கொடுப்பேன் எனவும் விஷால் தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X