Mark Antony - மார்க் ஆண்டனி டிக்கெட் புக்கிங்.. சரசரவென்று ஃபில் ஆகும் சீட்டுகள்
சென்னை: Mark Antony (மார்க் ஆண்டனி) மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் சூழலில் அதற்கான டிக்கெட் புக்கிங்கில் வேக வேகமாக டிக்கெட்டுகள் தீர்ந்துவருகின்றன.
செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஷால். தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக்கொண்டதால் சினிமாவில் தனித்து ஜொலிக்கிறார். செல்லமே படம் ஓரளவு வெற்றி பெற்று படவாய்ப்புகள் அமைந்தன.

சண்டக்கோழி: அந்த சமயத்தில் விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் விஜய்தான் முதலில் நடிக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் விஷாலின் நடிப்பை பார்த்த பலரும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவோக வலம் வருவார் என ஆரூடம் கூறினர். அதேபோல் அவர் நடித்த தாமிரபரணி, திமிரு உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்தன.
ஹிட்டுக்கு ஏக்கம்: ஆனால் சமீபமாக ஹிட் படங்கள் கொடுப்பதற்கு விஷால் ஏங்கிக்கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் எந்தப் படமும் ரசிகர்களை கவராததால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக உழைத்துவருகிறார் அவர். சமீபத்தில் நடித்த லத்தி படமும் அவருக்கு மோசமான தோல்வியையே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மார்க் ஆண்டனி: இப்படிப்பட்ட சூழலில் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார். ஃபோனில் டைம் ட்ராவல் என்ற ஒன்லைனில் படம் உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. படத்தில் விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது நாளை வெளியாகவிருக்கிறது. இதுவரை டைம் ட்ராவலை மையப்படுத்தி வந்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் இந்தப் படமும் கண்டிப்பாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் விஷால் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
டிக்கெட் புக்கிங்: நாளை படம் வெளியாவதை ஒட்டி டிக்கெட் புக்கிங் ஜோராக நடந்துவருகிறது. அதன்படி சென்னை ரோகிணி தியேட்டரில் முதல் காட்சியான 9 மணி காட்சிக்கு டிக்கெட்டுகள் 90 சதவீதம் புக் செய்யப்பட்டுவிட்டன. அதேபோல் சத்யம் , பலாசோ, ஐநாக்ஸ், பிவிஆர் உள்ளிட்ட திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் ஏறத்தாழ தீர்ந்துவிட்டன.
சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறதென்றே ரிப்போர்ட்டுகள் வருகின்றன. இதன் மூலம் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவுவதை புரிந்துகொள்ளலாம். எனவே இந்தப் படம் ஹிட்டடித்து நல்ல வசூல் எடுக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











