For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இனி நான் நீண்ட தூரம் நடப்பேன் - மார்கெட் ராஜா இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரண்

  |

  சென்னை: மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆரவ் இரு வேறு சாயலில், ஒரு தேர்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமா தாதாவாக மாறுவார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்று இயக்குநர் சரண் கூறியுள்ளார். மார்க்கெட் ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நான் வந்துவிட்டேன், மார்க்கெட் ராஜா மூலம் திரும்ப வந்துவிட்டேன் என்றார். வசூல்ராஜா எனக்கு தலை என்றால் மார்க்கெட் ராஜா எனக்கு பாதம். இனிமேல் நான் நடைபோடுவேன் என்று கூறியுள்ளார்.

  இயக்குநர் சரண் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்பு இயக்கியிருக்கும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக புதுமுக நடிகை காவ்யா தப்பார் நடித்துள்ளார்.

  நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன்.கே.கிங் இசையமைத்துள்ளார். A.S.லக்ஷ்மி நாராயணன் ஒலியமைப்பு செய்துள்ளார்.

  காமெடி திரில்லர்

  காமெடி திரில்லர்

  சரணின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் அவரது வழக்கமான பாணியில் காமெடி திரில்லர் என அனைத்தும் அடங்கிய ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். மிக விரைவில் வெளிவரவுள்ள இப்படத்தின் திரை முன்னொட்டம், இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று நடைபெற்றது.

  நடிகவேள் செல்வி

  நடிகவேள் செல்வி

  இவ்விழாவில், படத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமாருக்கு நடிகவேள் செல்வி எனும் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடிகர் சரத்குமார், இயக்குநர் சரண், ஆர்.கே. செல்வமணி, நாசர், தயாரிப்பாளர் AL.அழகப்பன், தனஞ்செயன், ரோகிணி ஆகியோருடன் படக்குழு மொத்தமும் மேடையேறி, ராதிகாவுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.

  காமெடி கொண்டாட்டம்

  காமெடி கொண்டாட்டம்

  தயாரிப்பாளர் மோகன் பேசும்போது, நான் இந்த இடத்தில் இருக்க காரணமான என் தாய் தந்தையர்க்கு நன்றி. நான் இதற்கு முன் ஒரு படம் எடுத்தேன் அது சரியாக வரவில்லை. இப்போது பெரும் நம்பிக்கையுடன் சரண் இயக்கத்தில் இந்தப்படம் செய்திருக்கிறேன். இந்தப்படம் இரண்டரை மணி நேர கொண்டாட்டமாக இருக்கும். இயக்குநர் சரண் அந்தளவு தன்னுடைய உழைப்பை தந்திருக்கிறார். ஆரவ்வுக்கு இந்தப்படம் மிகப்பெரிய அறிமுகமாக இருக்கும். ராதிகாவுக்கு பட்டம் அளித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

  முனைவர் ஞானசம்பந்தம்

  முனைவர் ஞானசம்பந்தம்

  முனைவர் ஞானசம்பந்தம் பேசும்பொழுது, நான் நிறைய படங்கள் பார்த்து வளர்ந்தவன் தான். இப்போது நிறைய அப்பா வேடங்களில் திரைத்துறையில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் இயக்குநர் சரண் தான். அவர் ஒரு மிகச்சிறந்த ரசனையாளர். திரைப்படத்தின் முன்னோட்டத்தினை பார்த்திருப்பீர்கள் படம் மிக அழகாக வந்திருக்கிறது. இந்தப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.

  ராதிகா சாதனைகள்

  ராதிகா சாதனைகள்

  ராதிகா சரத்குமார் இப்படத்தில் மிக வித்தியாசமான பாத்திரம் ஒன்றில் வருகிறார். அவர் படைத்த சாதனைகள் அளப்பரியது. தொலைக்காட்சி திரைப்படம் என இரண்டிலும் அவரின் பற்பல சாதனைகள் போற்றப்பட வேண்டும். அவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக இன்று அவருக்கு ஒரு பட்டம் அளிக்கப்படுகிறது. அதை சரண் பல மாதங்களாக திட்டமிட்டிருந்தார். அவர் இந்தப் பட்டதிற்கு முழுதும் தகுதியானவர். அவரது தந்தையின் நினைவுகளும் பாதுகாத்து போற்றப்பட வேண்டும் என்றார்.

  ராதிகா சரத்குமார்

  ராதிகா சரத்குமார்

  ராதிகா சரத்குமார் பேசும்பொழுது, என்னை விழாவுக்கு அழைத்த போது இந்த அளவு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பாவின் நினைவும் போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன்முதலில் பாரதிராஜா படத்தில் நடித்த போது என் தந்தை ஆச்சர்யப்பட்டார். நான் சினிமாவில் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தவள். முதன் முதலாக நடிக்கும் போது மேக்கப்பை தொட்டு என் தொழில் உன்னிடம் இருக்கட்டும் என என்னை ஆசிர்வதித்தார்.

  அப்பாவின் ஆசிர்வாதம்

  அப்பாவின் ஆசிர்வாதம்

  அவரது ஆசிர்வாதம் தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் என் கேரக்டர் என் அப்பாவின் சாயல்கொண்டது. அதுதான் இந்தப்பட்டம் எல்லாம் கொடுப்பதை சரணுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானலும் எனக்கு இப்பட்டம் அளித்ததற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

  பத்ம ஸ்ரீ விருது

  பத்ம ஸ்ரீ விருது

  சரத்குமார் பேசும்பொழுது, ராதிகாவை கவுரவப்படுத்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 41 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டியவர். என்னை விட அவர் நடிப்பில் மூத்தவர், பிரபல நட்சத்திரம். என்னைப் பொறுத்தவரை அவர் தான் லேடி சூப்பர்ஸ்டார்.
  அவருக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்திருக்க வேண்டும். பத்மஶ்ரீக்கு தகுதியானவர் அவர். இந்தப்படக்குழு அவரை கவுரவித்ததிற்கு மிக்க நன்றி. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படத்தை தியேட்டரில் ரசியுங்கள். மார்க்கெட் ராஜா வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

  இயக்குநர் சரண்

  இயக்குநர் சரண்

  இயக்குநர் சரண் பேசும்பொழுது, இந்த மேடை மட்டுமல்ல எந்த மேடையையும் எனக்கு தந்த இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், நண்பர் அஜித், தயாரிப்பாளர் சுரபி மோகன் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நான் வந்துவிட்டேன், மார்க்கெட் ராஜா மூலம் திரும்ப வந்துவிட்டேன். வசூல்ராஜா எனக்கு தலை என்றால் மார்க்கெட் ராஜா எனக்கு பாதம். இனிமேல் நான் நடைபோடுவேன். இப்படத்தில் அமர்க்களம் படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா மேடம்.

  அனைவரும் ரசிக்கலாம்

  அனைவரும் ரசிக்கலாம்

  என் படங்களில் வைரமுத்து பரத்வாஜ் இல்லாத குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சைமன்.கே.கிங். இந்தப்படத்தில் வேற லெவல் என சொல்லக் கூடிய உழைப்பைத் தந்திருக்கிறார் என் தம்பி கே.வி.குகன். என் அம்மா இருந்து எங்களைப் பார்த்திருக்க வேண்டும். ஆரவ் இந்தப்படத்தில் இரு வேறு சாயலில், ஒரு தேர்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமா தாதாவாக மாறுவார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார். இறுதியில், அனைவர் முன்னிலையில் பிரபலங்கள் மற்றும் படக்குழு கலந்து கொள்ள இசை வெளியீடு நடைபெற்றது.

  English summary
  Speaking at the music launch of the movie 'Market Raja MBBS', Director Saran said, 'I have just arrived and have been back by Market Raja. If 'Vasool Raja MBBS' is the head for me, 'Market Raja' is my half. Hereafter very longer will I walk.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X