Naga: மாரடைப்பால் மயங்கிய மர்மதேசம் இயக்குநர் நாகா... வதந்தி குறித்து குடும்பத்தினர் விளக்கம்
சென்னை: மர்மதேசம் சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குநர் நாகா.
சீரியல் உலகில் திரில்லரான நாடகங்களை இயக்கி 90ஸ் கிட்ஸ்களின் மனதில் இடம்பிடித்தவர்.
இந்நிலையில் தற்போது ஓடிடி தளத்துக்காக வெப் சீரிஸ் இயக்கி வந்த நாகா, ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நாகா உயிரிழந்துவிட்டதாக பரவிய செய்தி குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
மர்மதேசம் இயக்குநர் நாகாவின் ஹெல்த் அப்டேட்:சீரியல்கள் என்றாலே பேமிலி சென்டிமெண்ட் என்றிருந்த நேரத்தில், ஹாரர் திரில்லரில் நாடகங்கள் இயக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் நாகா. அவரது இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் 90ஸ் கிட்ஸ்களின் ஆல்டைம் பேவரைட் சீரியலாக உள்ளது. இந்த சீரியல் தான் நடிகர் சேத்தனுக்கும் பெரிய அடையாளம் கொடுத்தது.

மர்மதேசத்தை தொடர்ந்து விடாது கருப்பு, சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன் என ஹாரர் சீரியல்களில் மாஸ் காட்டினார். அதேநேரம், ரமணி Vs ரமணி, வீட்டுக்கு வீடு லூட்டி என காமெடியிலும் அதகளம் செய்துள்ளார் இயக்குநர் நாகா. மேலும், ஷங்கர் தயாரிப்பில் ஆனந்தபுரத்து வீடு என்ற படத்தையும் இயக்கியுள்ளார். நந்தா, சாயாசிங் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது பிரபல ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் இயக்கி வந்தார் நாகா. இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மயங்கி விழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நாகாவுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர்.
மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நாகா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் திடீரென இயக்குநர் நாகா இறந்துவிட்டதாக செய்திகள் பரவின. கட்டுத் தீபோல பரவிய இந்த செய்தியால் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால், இது முற்றிலும் வதந்தி என பின்னர் தெரியவந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகாவின் குடும்பத்தினரே விளக்கம் கொடுத்துள்ளனர். அதன்படி, நாகா உயிரிழந்ததாக பரவிய செய்தியில் துளியும் உண்மையில்லை எனவும், நாகாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











