twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க

    |

    சென்னை: தன்னுடைய திருமணம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர் தங்களுக்கு பொருத்தமான ஒரு உறவை தேர்வு செய்வதற்கு அவரவருக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு. அது அவரவர் உள்ளங்களில் ஏற்படும் உணர்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். இதில் சமூகம் தங்களது கருத்துக்களை கூறுவது சரியல்ல என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார் மிலிந்த் சோமன்.

    பிரபலமான நடிகரும் மாடலுமான மிலிந்த் சோமன் 26 வயது விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்குமான வயது வித்தியாசம் பற்றி தான் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுகிறது.

    Marriage involves a feeling of inner self-Milind Soman

    மிலிந்த் சோமன் மாடலிங் துறையில் இருந்தாலும் இந்தி, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    ஒரே இரவு.. கார்த்திக்கு காத்திருக்கும் சோதனை.. வெளியான சீக்ரெட்டால் கைதி படக்குழு அதிர்ச்சி!ஒரே இரவு.. கார்த்திக்கு காத்திருக்கும் சோதனை.. வெளியான சீக்ரெட்டால் கைதி படக்குழு அதிர்ச்சி!

    இவர் மாடலிங் துறையில் இருந்த போதே மைலின் ஜாம்பனாய் (Mylene Jampanoi) என்ற ஃபிரெஞ்ச் நடிகையை திருமணம் செய்திருந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். பின்பு படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த மிலிந்த் சோமன், கடந்த 2018ஆம் அண்டு அங்கிதா என்ற விமான பணிப்பெண்ணை காதலித்து கரம் பிடித்துள்ளார்.

    இவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இருவருக்கும் இடையில் உள்ள வயது வித்தியாசம் தான். சமீபத்தில் ஒரு டூத்பேஸ்ட் விளம்பரத்தின் மூலம் அவர்கள் இருவரின் உறவு பற்றி விமர்சித்தவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தைரியமாக பதிலடி கொடுத்தார்.

    Marriage involves a feeling of inner self-Milind Soman

    சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் காதல், மகிழ்ச்சி, பரிசுத்தமான அன்பு இருக்கும் வரையில் வயது வித்தியாசம் பார்க்க தேவையில்லை என்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற அவர்களது திருமணத்தின் போது ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. முக்கியமாக அவர்களின் வயது வித்தியாசம் சார்ந்த விமர்சனங்கள் தான்.

    இவர்கள் இருவரின் நெருக்கமான பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் அப்பா வயதில் இருக்கும் ஒருவர் மகள் வயதில் இருக்கும் ஒரு பெண்ணை மணந்தால் சமூகம் எப்படி அதை ஏற்று கொள்ளும் என்று பல விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர்.

    இவை அனைத்துக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் இருவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் வெகு விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர். மேலும் இது குறித்து கூறுகையில் பொதுவாக சமூகம் காதலிப்பவர்களுக்கு சாதி, மதம், பாலினம், நாடு என பல காரணங்களை கூறி தடைகளை உருவாக்குவார்.

    ஒருவர் தங்களுக்கு பொருத்தமான ஒரு உறவை தேர்வு செய்வதற்கு அவரவருக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு. அது அவரவர் உள்ளங்களில் ஏற்படும் உணர்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். இதில் சமூகம் தங்களது கருத்துக்களை கூறுவது சரியல்ல. இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு அன்பை பரிமாறிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது தான் அவசியமானது என்றார் மிலிந்த் சோமன்

    Read more about: cinema bollywood
    English summary
    Given the controversy over their marriage, one has the right and freedom to choose the right relationship for them. Love and affection must be based on the feelings in their heart. Milind Soman has responded that it is not right for the community to express their views.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X