For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணத்தை வெறுக்கும் திரிஷா... மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்படும் அம்மா

|

சென்னை: கல்யாணம் என்றாலே கசப்புதான் நடிகை திரிஷாவிற்கு காரணம் அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால்தான் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜியாவிடுகிறது. ராணா டகுபதியோடும் சில காலம் நட்புடன் இருந்தார். அந்த நட்பும் பாதியிலேயே முறிந்து போனது. 2015ஆம் ஆண்டில் வருண் மணியன் என்ற தொழிலதிபரோடு நிச்சயதார்த்தம் முடிந்தும் சில காரணங்களால் திருமணம் நடைபெறாமல் நின்று போனது. இதுபோன்ற சம்பவங்களால்தான் திருமணம் பற்றி பேசினாலே வெறுப்பாகி விடுகிறார் திரிஷா. அதே நேரம் மகளை மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்படுகிறார் அவரது அம்மா.

தமிழ் சினிமாவின் என்றென்றும் வசீகர நாயகி த்ரிஷா. கடந்த 15 வருடங்களாக முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர். கமல், விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, சூர்யா, ஜெயம் ரவி போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர்.

Marriage is a waste of time-Trisha

நம்ம பக்கத்துக்கு வீட்டு பொண்ணு போன்ற யதார்த்தமான ஒரு முகம், நடிப்பு போலவே தெரியாத அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பு, எல்லோருடனும் அன்பாக பழகும் குணம் இவை அனைத்தும் த்ரிஷாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்.

விஜய் சேதுபதியோடு இணைத்து நடித்த 96 திரைப்படம் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பின்பு, தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் திரிஷா.

Marriage is a waste of time-Trisha

ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் பெரும்பாலும் நடித்து வந்தார். தற்போது, பரமபத விளையாட்டு, சுகர், கர்ஜனை, ராங்கி, 1818 என வரிசையாக பல படங்களில் ஒப்பந்தமாகி படுபயங்கர பிஸியான நடிகையாக உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே ஓட்டம் பிடிக்கிறார். 2015ஆம் ஆண்டில் வருண் மணியன் என்னும் தொழிலதிபரோடு நிச்சயதார்த்தம் முடிந்தும் சில காரணங்களால் திருமணம் நடைபெறாமல் நின்றது.

Marriage is a waste of time-Trisha

பின்னர் ராணா டகுபதியோடும் சில காலம் நட்புடன் இருந்தார். அதிலும் யார் கண் பட்டதோ தெரியவில்லை. சில பல கருத்து வேறுபாடுகளால் அந்த நட்பும் பாதியிலேயே முறிந்து போனது. இப்படி பல கசப்பான நிகழ்வுகளால் திருமணத்தை முற்றிலுமாக வெறுக்கிறார்.

Marriage is a waste of time-Trisha

திரிஷாவின் நிலையால் மிகுந்த மன உளைச்சலில் தவிக்கிறார் அவரது அம்மா. தனது மகளுக்கு காலா காலாத்தில் திருமணம் செய்து பார்க்க முடியவில்லையே என்று அவர் கவலையோடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் த்ரிஷாவின் மனம் மாறி விடும் என்றும் அவரை மணக்கோலத்தில் பார்க்க ஆசையாக உள்ளது எனவும் அவரது நலம் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

English summary
The success of Trisha's life in the aftermath of the bitter events of the word marriage comes to mind. For some reason the marriage ended in 2015 with Business man Varun Manian.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more