கல்யாணத்தை நினைச்சாலே கை, கால் எல்லாம் நடுங்குது.. என்ன ஸ்ருதிஹாசன் காதலர் இப்படி சொல்லிட்டாரு?

சென்னை: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி கலை சார்ந்தது என பேசியுள்ள சாந்தனு ஹசாரிகா நடிகை ஸ்ருதிஹாசனுடனான உறவு மற்றும் திருமணம் பற்றிய பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

விக்ரம் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் கமலுக்கு கூடிய சீக்கிரமே தனது மூத்த மகள் ஸ்ருதிஹாசனின் திருமணம் பற்றிய சந்தோஷமான செய்தியும் கிடைத்து விடும் என்றே தெரிகிறது.

பிரபாஸ் உடன் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் நீண்ட காலமாக நெருங்கிய உறவில் இருந்து வருகின்றனர்.

இரண்டாவது காதல்

இரண்டாவது காதல்

வெளிநாட்டினரான மைக்கேல் கார்சலேவை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்த நிலையில், இருவரும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அப்பா கமல்ஹாசனிடமே தனது காதலரை வேட்டி சட்டையை அணிவித்து அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரேக்கப் ஆன நிலையில், அடுத்ததாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சாந்தனு ஹசாரிகா

சாந்தனு ஹசாரிகா

குவஹாத்தியில் பிறந்து வளர்ந்த சாந்தனு ஹசாரிகா இன்ஜினியரிங் படிக்க சென்னை வந்த நிலையில், இங்கே உள்ள கோயில்கள், சிற்பங்களை எல்லாம் பார்த்து தனக்கு இன்ஜினியரிங்கில் ஆர்வம் இல்லை என்பதையும் இலுஸ்ட்ரேட் ஆர்ட்டிஸ்ட்டாக ஆகத்தான் விருப்பம் என்பதை புரிந்து கொண்டு அப்படியொரு கலைஞராக மாறிய அவர், தற்போது இசைக் கலையில் சிறந்து விளங்கும் ஸ்ருதிஹாசன் உடன் காதலில் விழுந்தார்.

லிவ்விங் டுகெதர்

லிவ்விங் டுகெதர்

நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா லாக்டவுன் சமயத்தில் ஒரே வீட்டில் லிவிங் டுகெதராக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் படு நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர். நடிகை நயன்தாரா காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஸ்ருதிஹாசன் திருமணம் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரே பதட்டமா இருக்கு

ஒரே பதட்டமா இருக்கு

சமீபத்தில், பேட்டி ஒன்றில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சாந்தனு ஹசாரிகா திருமண பேச்சை யாராவது எடுத்தாலே எனக்கும் ஸ்ருதிக்கும் ஒரே பதட்டமாகி விடும். நாங்கள் அதற்காக தயார் ஆக வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது கலைக் காதல். நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும், நான் ஓவியத்தைப் பற்றியும் அவர் இசையைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருப்போம் என பதிலளித்துள்ளார்.

அதுக்கு முற்றுப்புள்ளி

அதுக்கு முற்றுப்புள்ளி

நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதாக ஓப்பனாக சொன்ன நிலையில், சாந்தனு ஹசாரிகாவும் ஸ்ருதிஹாசனை விட்டு விலகி விட்டாரா என கேள்விகள் எழுந்தன. சமீப காலமாக இருவரும் இணைந்து எந்தவொரு போட்டோக்களையும் போடாத நிலையில், கிளம்பிய வதந்திகளுக்கு தற்போது சாந்தனு ஹசாரிகா அளித்துள்ள பதில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும், கலையை ரசிக்கும் புரிந்து கொள்ளும் ஸ்ருதி தனக்கு காதலியாக கிடைத்ததே மிகப்பெரிய பாக்கியம் என்றும் சாந்தனு பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X