திரைத் துளி
சென்னை:
பார்த்தேன் ரசித்தேன் பட இயக்குனர் சரண் திருமணம் நவம்பர் 3ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குனராக அறிகமானவர் சரண். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் என்று தொடர்ந்துவெற்றிப் படங்களை தந்து வரும் சரண், இப்போது பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கும் அல்லி அர்ஜூனா என்ற படத்தைஇயக்கி வருகிறார்.
பட வேலைகளோடு திருமண ஏற்பாட்டிலும் தீவிரமாகியிருக்கிறார் சரண். பெண் சுபலட்சுமி. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.சரணின் உறவுக்காரப் பெண் இவர். எனவே இது காதல் திருமணமல்ல என்றார் சரண்.
இரு வீட்டாரின் ஏற்பாட்டில் திருவனந்தபுரத்தில் இருந்து மணவாழ்க்கையை தொடங்குகிறார் சரண்.
Comments


Click it and Unblock the Notifications