For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருதநாயகம் நிச்சயம் வருவான்… நான் நடிக்க மாட்டேன் என்கிறார் கமல்

|
விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு கதி என்ன? -கமல் விளக்கம்-வீடியோ

சென்னை: மருதநாயகம் திரைப்படம் நிச்சயம் வெளிவரும். ஆனால் நிச்சயம் நான் அதில் நடிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். மருதநாயகம் திரையில் பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை என்னோடு பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான். மக்கள் நீதி மையத்தின் தலைவர் என்ற முறையில், எனக்கு சில பொறுப்புகள் இருக்கின்றன. மக்களோடு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

உலக நாயகனாக போற்றப்படும் கமல்ஹாசன் அதற்கு எத்தனை தகுதி படைத்தவர் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அவரின் தனித்துவமான படைப்புக்களை பற்றி வேறு யாரும் யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

Marudhanayagam Film will definitely come – Kamal Haasan

அவரின் பல படைப்புக்களை நாம் கண்டு களித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு இன்றும் உள்ளத்தில் இருக்கும் ஒரு பெரிய ஏக்கம் அவரின் மருதநாயகம் திரைப்படம். அந்தப் படம் விரைவில் வெளிவராதா என்று ஏங்குவது கமல் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமும் தான்.

மருதநாயகம் வெளி வராததற்கு வர்த்தக ரீதியிலான காரணங்கள் கூறப்பட்டது. அந்த நிலைமை இன்று தமிழ் சினிமாவில் கிடையாது. 150 கோடி 300 கோடி பட்ஜெட்டில் பாகுபலி, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற வரலாற்று படங்கள் வெளியாகியிருக்கும் தருவாயில், மருதநாயகம் மட்டும் திரையில் வராததற்கு காரணம் என்ன என்பது கமல் ரசிகர்கள் மற்றும் மக்களின் குரல்.

இதற்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். மருதநாயகம் திரையில் பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை என்னோடு பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான். மக்கள் நீதி மையத்தின் தலைவர் என்ற முறையில், எனக்கு சில பொறுப்புகள் இருக்கின்றன. மக்களோடு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், நான் நினைத்து வைத்த கனவுகளை எல்லாம், நல்ல நடிகர்களை வைத்து உருவாக்கும் நிறுவனமாகவே ராஜ்கமல் நிறுவனம் இருக்கும். எனவே மக்களுடனான இந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது என்றார் கமல்ஹாசன்.

நீங்க மனசு வச்சா அடுத்த வருசம் எனக்கு தல தீபாவளி தான் - பிரியா ஆனந்த் உற்சாகம்

தனது முதல் கதாநாயகன் அனுபவம் குறித்து அவர் கூறுகையில், வேறு யாரும் நடிக்க மறுத்த ஒரு கதாபாத்திரம், கடைசியில் என தலையில் வந்து விழுந்தது. நானே அந்த படத்தின் கதையை எழுதிய அனுபவத்தால், என்னை அந்த படத்தின் கதாநாயகனாக நடிக்க நிர்பந்தித்து. எனவே உணர்ச்சிகள் திரைப்படத்தில் நான் கதாநாயகனாக அறிமுகமான அனுபவம் ஒரு விசித்திரமான அனுபவம் என்றார்.

உலக நாயகன், காதல் இளவரசன், நம்மவர், உங்கள் நான் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் நடிகர் கமல்ஹாசன். இப்படி பல பட்டங்களில் அவர் அழைக்கப்பட்டாலும் அவருக்கு மிகவும் பிடித்த பட்டம் நாம் அனைவரும் அறிந்ததே. அது உங்கள் நான் பட்டம் தான் என்றார்.

பலரும் நமக்கு அறிவுரை கூறுவார்கள். அவை அனைத்தையும் கேட்டுக் கொள்ளலாமே தவிர, அதன்படி தான் நாம் நடந்து கொள்ளவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இது என்னுடைய கருத்து என்றார். இப்படி பல சுவாரஸ்யமான பதில்களை பகிர்ந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

அவரின் இந்த அரசியில் பிரவேசம் மிகவும் துடிப்புடன் செயல்படுகிறது. அதை மென்மேலும் அவர் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கையும் நமக்கு உண்டு.

English summary
Marudhanayagam will definitely come out. But I will definitely not star in it, Kamal Haasan has said. Marudanayagam has no problem viewing the screen. But it is doubtful whether you can see it with me, said Kamal Haasan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more