»   »  ஸ்ரீதிவ்யாவா, லட்சுமி மேனனா.... யார் விஷாலின் அடுத்த ஹீரோயின்?

ஸ்ரீதிவ்யாவா, லட்சுமி மேனனா.... யார் விஷாலின் அடுத்த ஹீரோயின்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு சொல்லும் அளவிற்கு பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது, விஷாலின் அடுத்த பட ஹீரோயின் லட்சுமி மேனனா அல்லது ஸ்ரீதிவ்யாவா என்னும் கேள்வி.

பாண்டிராஜ் இயக்கத்தில் கதகளி ஆடிவரும் விஷால், அடுத்ததாக கொம்பன் முத்தையா இயக்கத்தில் மருது திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

Marudhu: Who is Vishal's Next Heroine?

இந்தப் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

முத்தையா இயக்கிய குட்டிப்புலி மற்றும் கொம்பன் ஆகிய 2 படங்களிலும் ஹீரோயினாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவரை நடிக்க வைக்கவே முத்தையா விரும்புகிறாராம்.

ஆனால் இதற்கிடையில் படத்தின் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா தான் லட்சுமி மேனன் அல்ல என்று புதியதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் ஆனால் தற்போது ஸ்ரீதிவ்யா தான் விஷாலுடன் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

ஏற்கனவே பாண்டிய நாடு மற்றும் நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் விஷாலுடனும், கொம்பன் மற்றும் குட்டிப்புலி ஆகிய படங்களில் இயக்குநர் முத்தையாவுடனும் லட்சுமி மேனன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

இதில் கொம்பன் படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் முத்தையா பிடிவாதமாக இருந்து அவரையே நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Vishal Next Team up with Komban Fame Muthiah and the Movie Titled as Marudhu. Sources Said Young Actress Sridivya will be Pair Opposite to Vishal.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil